ரவி சாஸ்திரி தலைமையிலான கிரிக்கெட் அணியை பாராட்டும் பாகிஸ்தானின் ரமீஜ் ராஜா

தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியின் சிறந்த உத்திகளை ரவி சாஸ்திரியும் அவரது அணியும் பின்பற்றி வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா கூறுகிறார்…

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2021, 06:51 PM IST
  • ரவி சாஸ்திரி தலைமையிலான கிரிக்கெட் அணியை பாராட்டும் ரமீஜ் ராஜா
  • பாகிஸ்தானின் உத்திகளை இந்தியா பயன்படுத்தி முன்னேறியது என கருத்து
  • இந்தியா தற்போது இருக்கும் நிலைக்கு வர பாகிஸ்தான் அணிக்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என ரமீஸ் ராஜா கருத்து
ரவி சாஸ்திரி தலைமையிலான கிரிக்கெட் அணியை பாராட்டும் பாகிஸ்தானின் ரமீஜ் ராஜா title=

ரவி சாஸ்திரி தலைமையிலான இந்தியா அனைத்து வடிவங்களிலும் அதிக வெற்றியைப் பெற்றுள்ளது, ஆனால் இதுவரை ஐசிசி பட்டத்தை வெல்லவில்லை என்பதுதான் ஒரே குறையாக இருக்கிறது. இருந்தாலும், விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி 2017 நடுப்பகுதியில் இருந்து கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் நன்றாக செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (Pakistan Cricket Board) தலைவராக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். ரமீஸ் ராஜா-இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 1992 உலகக் கோப்பையை வென்றது. 

கடந்த காலத்தில் பாகிஸ்தான் அணியின் அனைத்து நல்ல உத்திகளையும் ரவி சாஸ்திரி எடுத்து பயன்படுத்திக் கொண்டு, இந்திய அணியை முன்னேற்றியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் கூறுவது அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது.  

Also Read | பிரியாணிக்கு ₹27 லட்சமா.. அதிர்ச்சியில் உறைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்..!!!

ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி, கடந்த காலங்களில் இருந்து பாகிஸ்தான் அணியின் அனைத்து நல்ல உத்திகளையும் பின்பற்றியது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் ரமீஸ் ராஜா பாராட்டாக சொன்னாலும், இது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்புகிறது.

ARY ஸ்போர்ட்ஸிடம் பேசிய ராஜா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரிக்கு கடந்த கால பாகிஸ்தான் கிரிக்கெட்டை எப்போதும் பிடிக்கும் என்று கூறினார். எனவே, கோஹ்லி தலைமையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு, முந்தைய பாகிஸ்தான் அணியின் அனைத்து நல்ல உத்திகளையும் உள்வாங்கியுள்ளதாக நம்புவதாக தெரிவித்தார்.

"தாமதமாக என்றாலும் கூட, பாகிஸ்தான் அணியின் அனைத்து நல்ல உத்திகளையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எப்போதுமே பாகிஸ்தானின் உத்திகளால் ஈர்க்கப்பட்டவர்,   எங்கள் அணி கடினமாக உழைக்கும் அணி, அர்ப்பணிப்புடன் செயல்படும் எங்கள் அணியில் 100% திறமை உள்ளவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். நாங்கள் எந்தவொரு சமயத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்திய அணியும் இந்த பண்புகளை உள்வாங்கி, அவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர், திறமைக்காக நிறைய வேலை செய்தனர், அவர்களின் முதல் வகுப்பு கிரிக்கெட்டின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது, இது அவர்களுக்கு அனைத்து வடிவங்களிலும் பயனளித்துள்ளது. இந்திய அணி இப்போது இருக்கும் நிலையை நாங்கள் அடைய அடுத்த 3-4 ஆண்டுகளில் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும்” என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

Read Also | 'பேட்ஸ்மேன்கள்' இனி 'பேட்டர்கள்' என்று மட்டுமே அழைக்கப்படுவர்!

அதாவது ஒரு காலத்தில் நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி தற்போது இருக்கும் நிலையை ரமீஸ் ராஜா சுட்டிக் காட்டுகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் அணியை பார்த்து கற்றுக் கொண்ட விஷயங்களால் இந்திய அணி நல்ல நிலைக்கு முன்னேறியிருக்கிறது, அதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ரமீஸ் ராஜா தனது அணிக்கு இடித்துரைக்கிறாரா?

எது எப்படியிருந்தாலும் சரி! ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2021 டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்பதை ரவி சாஸ்திரி ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளார். 
இந்தியாவின் டி 20 ஐ கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோஹ்லியும் விலகுகிறார்.

இந்த நிலையில் இந்திய அணி ஐசிசி கோப்பையைக் கைப்பற்றினால் அது இந்தியாவின் 8 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்கும். விராட் கோலியின் பதவிக்காலம் நிறைவோடு நிறைவுறும். ரவி சாஸ்திரியும் தனது ஓய்வை பெருமிதத்தோடு அனுபவிக்கலாம்.

Also Read | சம்பள பட்டியலில் மெஸ்சியை முந்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News