இந்தியாக்கு வந்த சோதனை! டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ப்ரிதீவ் ஷா!

ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியின் போது இந்திய வீரர் ப்ரிதீவ் ஷாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு! 

Last Updated : Nov 30, 2018, 11:50 AM IST
இந்தியாக்கு வந்த சோதனை! டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ப்ரிதீவ் ஷா! title=

ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியின் போது இந்திய வீரர் ப்ரிதீவ் ஷாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு! 
 
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி துவங்க உள்ளது. டெஸ்ட் தொடர் இரு அணிக்குமே சவாலானது என்பதால் இரு அணிகள் இடையேயான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுலை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரோஹித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 11 ரன்களை எடுத்தார். இந்த இன்னிங்ஸில் ராகுலைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறப்பாக ஆடினர்.

குறிப்பாக வழக்கம்போலவே ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக ஆடி பிரித்வி ஷா நம்பிக்கையளித்தார். 69 பந்துகளை எதிர்கொண்ட பிரித்வி ஷா, 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களை குவித்தார். ஒவ்வொரு ஷாட்டையும் அபாரமாக ஆடினார்.

இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தின் பீல்டிங்கின் போது பவுண்டரி லைனில் நின்றிருந்த ப்ரிதீவ் ஷா தன்னை தாண்டி பவுண்டரி லைனிற்குள் சென்ற பந்தை கேட்சை பிடிக்க முயற்சிபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவுடன் வலியில் துடித்த ப்ரிதீவ் ஷா இந்திய அணியின் மருத்துவ குழுவினர் உடனடியாக மைதனாத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

ப்ரிதீவ் ஷாவிற்கு முதலுதவி அளித்த பின்னர் அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ., தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட் வந்தபிறகு தான் ப்ரிதீவ் ஷாவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் நிலை குறித்தும், அவர் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா என்பது தெரிய வரும். ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இவர் தான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தால் எதிர்பார்க்கப்பட்டு வந்த ப்ரிதீவ் ஷாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான்.

 

Trending News