ஹைதராபாத் டெஸ்ட்: ராகுலின் சதம் ஜஸ்ட் மிஸ்... ஆனால் அவர் செஞ்ச சம்பவம் பெரிசு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்திய அணி வலுவான நிலைக்கு செல்ல அவரின் பேட்டிங் அடித்தளமாக இருந்தது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2024, 02:06 PM IST
  • ஹைதராபாத் டெஸ்ட் போட்டி
  • சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல்
  • 14 ரன்களில் சதம் மிஸ் ஆனது
ஹைதராபாத் டெஸ்ட்: ராகுலின் சதம் ஜஸ்ட் மிஸ்... ஆனால் அவர் செஞ்ச சம்பவம் பெரிசு..! title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர்.  3 பவுண்டரிகள் விளாசி 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா அவுட்டானார்.

மேலும் படிக்க | டென்னிஸ் வரலாற்றில் இந்தியரின் மகத்தான சாதனை... 43 வயதிலும் மிரட்டும் போபண்ணா! 

மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்தார். கடைசி வரை தன்னுடைய அதிரடியை தொடர்ந்து கொண்டே இருந்த அவர் 74 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் விளாசினார். ஒன்டவுன் வந்த சுப்மன் கில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மிடில் ஆர்டரில் களமிறங்கிய கே.எல்.ராகுல் பொறுப்புடன் நின்று விளையாடினார். அவருக்கு ஸ்ரேயாஸ் கம்பெனி கொடுக்க அரைசதம் அடித்தார் ராகுல். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் சிறப்பாக ஆடினார்.

இறுதியில் ராகுல் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 123 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ராகுலின் இந்த பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி இங்கிலாந்து அணியை லீட் எடுத்தது. 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்களை கடந்த இந்திய அணி இப்போது வரை 54 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பின்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜடேஜாவுடன் பரத், அஸ்வின், பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் நல்ல பேட்டிங் இருக்கும் ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்திய அணி பெரும் நம்பிக்கையில் இருக்கிறது. 

மேலும் படிக்க | IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்... நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News