IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்... நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? - முழு விவரம்

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை நேரலையில் எங்கு, எப்படி பார்ப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 24, 2024, 05:52 PM IST
  • விராட், புஜாரா, ரஹானே, ஷமி இல்லாமல் நீண்ட நாளுக்கு பின் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
  • விராட் கோலிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார்.
  • இளம் வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கி வருகிறது.
IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்... நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? - முழு விவரம் title=

IND vs ENG 1st Test Live Telecast Details: கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள்களாக ஏங்கிக்கொண்டிருந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜன. 25) முதல் தொடங்குகிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாதது ரசிகர்களுக்கு சுணக்கத்தை தந்தாலும், ரோஹித் - ஜெய்ஸ்வால் ஜோடியின் அதிரடி, பும்ரா - சிராஜ் ஜோடியின் புயல் வேக தாக்குதல், ஜடேஜா - அஸ்வின் ஜோடியின் சுழல் மாயாஜாலம், மெக்கலாம் - ஸ்டோக்ஸ் இணைந்து படைக்கும் பாஸ்பால் கிரிக்கெட் என பல எதிர்பார்ப்புகள் தற்போது நீடிக்கின்றன.

இந்திய அணியும் எதிர்பார்ப்பும்...

பந்துவீச்சில் ஷமி, பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரஹானே, விஹாரி என கடந்த சில ஆண்டுகளாக டெஸ்டில் மிரட்டி வந்த மூத்த வீரர்கள் இதில் இல்லாமல் போனாலும் இளம் வீரர்கள், வளர்ந்து வரும் வீரர்கள் ஆகியோரின் பங்களிப்பை எதிர்நோக்கி வல்லுநர்கள் காத்திருக்கின்றனர். விராட் கோலிக்கு மாற்று வீரராக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்ட நிலையில், அனுபவ வீரர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறைக்கு பிசிசிஐ வழிவிட்டுள்ளது. 

குறிப்பாக சுப்மான் கில் டெஸ்டில் தேறுவாரா, விக்கெட் கீப்பராக அணியில் நீடிக்கப்போவது யார், ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் பங்களிப்பாரா இல்லை அதே பலவீனத்திற்கு வீழ்வாரா என இந்திய அணி மீது கேள்வி எழுப்பவும் பலரும் காத்திருக்கின்றனர். தற்போது இரண்டு போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IND vs ENG: விராட் கோலி இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்! இந்தியாவின் பிளேயிங் 11!

இங்கிலாந்தின் டெஸ்ட் ஆதிக்கம்

இங்கிலாந்து அணியும் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் வருகிறது. சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. டெஸ்டில் புதுவித அணுகுமுறையை இங்கிலாந்து புகுத்தினாலும் இந்திய அணியின் தட்பவெப்பத்திற்கு ஏற்றாற்போல், பாஸ்பால் அணுகுமுறையை திட்டமிடுவதும் இங்கிலாந்து அணியின் முக்கிய வியூகமாக இருக்கும். 

கடந்த டெஸ்ட் தொடர்கள் மீள் பார்வை

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இங்கிலாந்து 50 போட்டிகளிலும், இந்தியா 31 போட்டிகளிலும் விளையாடி உள்ளன. மேலும், 50 போட்டிகள் டிராவாகி உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட விராட் கோலி தலைமையில் இந்தியா, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்த தொடர் நடைபெற்றது. முதல் போட்டி டிராவாக, இரண்டாவது போட்டியை இந்தியாவும், மூன்றாவது போட்டியை இங்கிலாந்தும் வென்றன. நான்கவாது போட்டியைும் இந்தியா வென்று தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி போட்டிக்கு முன் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கடைசி போட்டி அடுத்தாண்டு நடைபெற்றது. 

மேலும் படிக்க | IND v ENG: விராட் கோலிக்கு பிறகு மேலும் ஒரு வீரர் விலகல்! பயிற்சியின் போது காயம்!

ரோஹித் vs ஸ்டோக்ஸ்

கடைசி போட்டி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், பும்ரா இதில் இந்திய அணியை வழிநடத்தினார். இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற தொடர் 2-2 என்று சமனில் முடிந்தது. எனவே, கோப்பையை தக்கவைக்கும் முயற்சியில் இம்முறை ரோஹித் சர்மாவும், பென் ஸ்டோக்ஸூம் தீவிரமாக இருப்பார்கள். எனவே, இந்த டெஸ்ட் தொடரில் அனல் பறக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இதன் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். முன்னர் கூறியது போல் இந்திய அணி ஜடேஜா - அஸ்வின் ஜோடி உடன் குல்தீப் யாதவையும் பிளேயிங் லெவனில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிராஜ் - பும்ரா உடன் இவர்களும் பந்துவீச்சு தாக்குதலை தொடுக்கும்போது, டாப் ஆர்டரில் நிச்சயம் ஒரு பேட்டரையும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், எந்த அணி டாஸ் வென்றாலும் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பேட்டிங்கை தேர்வு செய்வதே நல்லது.

இந்தியாவுக்கும் எச்சரிக்கை

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சில் சோயப் பஷீர் முதல் போட்டியில் விளையாடவில்லை. எனவே, அனுபவ வீரர் ஜாக் லீச் உடன் டாம் ஹார்ட்லே அல்லது ஆல்-ரவுண்டர் ரெஹன் அகமது ஆகியோரை களமிறக்க இங்கிலாந்து திட்டமிடலாம். ஆஃப் ஸ்பின்னராக ஜோ ரூட்டும் இருப்பதால் அந்த அணிக்கு கூடுதல் ஆப்ஷனும் உள்ளது. எனவே, இந்திய பேட்டர்களும் இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

IND vs ENG: நேரலையை எப்படி பார்ப்பது?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் நாளான நாளை காலை 9 மணிக்கு டாஸ் வீசப்படும். போட்டி நடைபெறும் ஐந்து நாள்களிலும் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் Sports 18 சேனலிலும், ஓடிடியில் Jio Cinema தளத்திலும் நேரலையில் பார்க்கலாம்.  

மேலும் படிக்க | இங்கிலாந்து வீரர் விலகல்... விசா கொடுக்காத இந்தியா - கடுப்பில் பென் ஸ்டோக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News