பிரகாசமாகும் உலகக் கோப்பை வாய்ப்பு... பயிற்சியிலும் கெத்து காட்டும் அஸ்வின்

Ravi Ashwin: உலகக் கோப்பை அணியில் இடம்பெறாவிட்டாலும், அதில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படும் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 19, 2023, 10:08 PM IST
  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகளில் அவர் உள்ளார்.
  • அக்சர் படேல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
  • அவர் குணமாகாதப் பட்சத்தில் அஸ்வின் உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளது.
பிரகாசமாகும் உலகக் கோப்பை வாய்ப்பு... பயிற்சியிலும் கெத்து காட்டும் அஸ்வின் title=

Ravi Ashwin: உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அதிக முறை உலகக் கோப்பையை வாங்கிய ஆஸ்திரேலியா, கடந்த முறை சாம்பியன் பட்டத்தை நூழிலையில் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி, நீண்ட நாள்களாக உலகக் கோப்பை பசியில் சுற்றும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஆகியவற்றுடன் சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் காத்திருக்கின்றது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களை உலக அளவில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இத்தொடருக்காக காத்திருக்கின்றனர். 

இந்த தொடருக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியாவில் விளையாடுகிறது. செப். 22, 24, 27ஆம் தேதி முறையே மொஹாலி, இந்தூர், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் விளையாட உள்ளது. குறிப்பாக, இந்த மூன்று மைதானங்களும் உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பையில் தங்களின் முதல் போட்டியை அக். 8ஆம் தேதி சென்னையில் விளையாடுகின்றன. இந்த போட்டியின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

மேலும் படிக்க | கவுண்டி தொடரில் விளையாட புஜாராவுக்கு தடை! இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற நம்பிக்கையோடு இருந்தாலும், அக்சர் படேலின் காயம் இந்திய அணியை கவலைக்குள்ளாக்கியுள்ளது. அவர் உடல் தகுதி பெறுவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்க அவருக்கு பதில் அந்த இடத்தில் ஒரு ஆஃப் ஸிபின்னரை முயற்சிக்க இந்திய அணி விரும்புகிறது. அதன் பேரில், ஆஸ்திரேலிய தொடரின் மூன்று போட்டிகளிலும் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். மூன்றாவது போட்டியில் மட்டும் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது அவர் உடல்தகுதியோடு இருக்கிறார் இல்லையா என்பது தெரிந்துவிடும். 

மேலும், அஸ்வின் மீது கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், வாஷிங்டன் சுந்தரை விட அனுபவம் வாய்ந்தவரும், சுழல் வித்தைக்காரருமான அஸ்வினே பிளேயிங் லெவனில் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. அந்த வகையில், ஆஸ்திரேலியா தொடருக்கு முன் நடைபெற்று வரும் பயிற்சிகளில் அஸ்வின் தீவிரம் காட்டி வருகிறார் என தெரிகிறது. 

சர்வதேச நட்சத்திரமாக ஆன பிறகும், அஸ்வின் கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வருபவர். இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் VAP கோப்பை தொடர் இன்று SSN மைதானத்தில் நடந்தது. இதில், யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்கு எதிராக மயிலாப்பூர் பொழுதுபோக்கு கிளப் A அணிக்காக அஸ்வின் விளையாடினார். 

அதில், மயிலாப்பூர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஷ்வின் 17 பந்துகளில் எந்த பவுண்டரியும் அடிக்காமல் 12 ரன்கள் எடுத்தார். முகுந்த் கே (78), அஃபான் காதர் எம் (79) ஆகியோர் அதிகபட்சமாக அடித்தனர். பதிலுக்கு, யங் ஸ்டார்ஸ் 48 வது ஓவரில் 257 ரன்களுக்குச் சுருண்டது, திரன் விபியின் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் தனது 10 ஓவர்களில் 30 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார், மயிலாப்பூர் ரிக்ரேஷனல் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | தன்னையே தியாகம் செய்தவர் தோனி... சொன்னவர் யாருனு பாத்த ஆச்சரியப்படுவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News