IPL 2021: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டன் ரிஷப்பந்த், தற்போது கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அணிக்கு மட்டுமே கேப்டனாக பணியாற்றிய அனுபவமுள்ள ரிஷப்பந்த், இனிமேல், டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களை வழிநடத்தும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்று ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ஸ்ரேயஸ் ஐயர் இல்லாத நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு யார் கேப்டன்? என்ற கேள்வி சில நாட்களாகவே பரபரப்பாக பேசபப்ட்டு வந்தது. பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. அஜிங்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ஆர்.அஸ்வின், ஷிகர் தவண், பிருத்வி ஷா என பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அணியின் துணை கேப்டனாக இருந்த ரிஷப் பநதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ANNOUNCEMENT
Rishabh Pant will be our Captain for #IPL2021 @ShreyasIyer15 has been ruled out of the upcoming season following his injury in the #INDvENG series and @RishabhPant17 will lead the team in his absence #YehHaiNayiDilli
— Delhi Capitals (@DelhiCapitals) March 30, 2021
கடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப்பந்த் 2018ம் ஆண்டு நடந்த மெகா ஐபிஎல் ஏலத்திலும் அணியில் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.
Also Read | Shreyas Iyer இல்லாத நிலையில் டெல்லி கேபிடல்ஸின் கேப்டன் இவர்களில் யார்?
தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் என்ற உயர்வுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் ரிஷப் பந்த். அதில், “நான் வளர்ந்த இடம் டெல்லி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஐபிஎல் பயணம் தொடங்கியது. இந்த அணியை ஒரு நாள் வழிநடத்துவேன் என்ற் எனது கனவு நனவாகிறது. அனைவருக்கும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த பொறுப்புக்கு என்னை போதுமான திறனுள்ளவனாகக் கருதிய எங்கள் குழு உரிமையாளர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஒரு அற்புதமான குழு மற்றும் என்னைச் சுற்றியுள்ள திறமையான மூத்தவர்களின் ஆதரவுடன் எனது முழு திறமையையும் நான் வெளிகாட்டுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அணிக்கு தலைமை இளம் வயது கேப்டன்களில் ஐந்தாவது இடத்தை ரிஷப்பந்த் பெறுகிறார். இதற்கு முன் விராட் கோலி , ஸ்மித் தங்களின் 22 வயதில் கேப்டன் பதவியை ஏற்றனர், ரெய்னா, ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப்பந்த் தங்களின் 23 வயதில் கேப்டன் பதவியை ஏற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், டி20 தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி நல்ல பெயரை எடுத்தார். இதுவே கேப்டன் பதவி ரிஷப்பந்த்துக்கு தேடி வரக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்
ரிஷப் பந்த் உலக கிரிக்கெட்டிற்கு கிடைத்த அருமையான சொத்து என்றே கூறலாம். ஸ்டம்புகளுக்குப் பின்னால் சிலிர்க்க வைப்பதில் இருந்து தனது அணியை ஊக்குவிப்பதற்காக போட்டிகளை மாற்றுவதற்கான திறனைக் கொண்டிருப்பதிலிருந்து, பந்த் அணியின் கேட்பனாக சிறப்பாக செயல்படுவார்.
ரிஷப் பந்த் குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “நான் இல்லாத நிலையில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரிஷப்பந்த் சிறந்த பேட்ஸ்மேன். இந்தப் பதவிக்கு ரிஷப்பந்த் பொருத்தமானவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” எனத் தெரிவி்த்தார்.
கடந்த 2016 ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப்பந்த் 2018ம் ஆண்டு ஏலத்தில் தக்கவைக்கப்பட்டபோது, ரூ.15 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். 2022ம் ஆண்டு நடக்கும் மெகா ஏலத்தின்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்களில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்தார்போல், ரிஷப் பந்த் இருக்கிறார்.
Also Read | ஐபிஎல் முன்னேற்பாடுகளுக்காக மும்பைக்கு செல்லும் CSK
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR