நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில், இந்தியா த்ரில் வெற்றி பெற்றது!
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 5-வது டி20 போட்டி இன்று பே ஓவன் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2(5) ரன்களில் வெளியேற, மறுபுறம் கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடி 45(33) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரோகித் சர்மா 60*(41) குவித்தார், எனினும் ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் இடையில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 33*(31) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
It's a clean sweep!
India win the T20I series 5-0 #NZvIND pic.twitter.com/Hc8HX9w4GS
— ICC (@ICC) February 2, 2020
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
துவக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் திணறிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியில் டிம் செய்ப்ரிட் 50(30) மற்றும் ரோஸ் டெய்லர் 53(47) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர் எனினும், நியூணிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்திய அணியின் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நவ்தீப் சைனி மற்றும் சர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்தியக கிரிக்கெட் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் தட்டி சென்றது.
சொந்த நாட்டை விட்டு விலகி இந்தியாவுக்கு தொடர் வெற்றி (3+ போட்டி):
- ஆஸ்திரேலியாவுடன் 2015/16-ல் 3-0
- மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2019-ல் 3-0
- நியூசிலாந்து அணியுடன் 2020-ல் 5-0