Rohit Sharma's Mantra ; சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மீண்டும் வென்றிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை தோல்வியின் விளிம்பு வரை சென்று இறுதி கட்டத்தில் கம்பேக் கொடுத்து வீழ்த்தியது. இந்த கம்பேக்குக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா சொன்ன வார்த்தைகள் தான் இந்திய அணியின் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து பேசும்போது, " 20 ஓவர் உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் கனவு. ஒரு அணியாக நாங்கள் விளையாடி வெற்றி பெற்று, எங்கள் கனவை அடைந்திருக்கிறோம். எங்களுக்கு இது மகிழ்ச்சி. ரோகித் ஒரு சிறந்த கேப்டன் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், எல்லா பிளேயர்களையும் ஒரே மாதிரியாகவும், எல்லா சூழல்களிலும் இலகுவாகவும் நடத்தினார். அது அவருக்கே இருக்கும் கேப்டன்சி திறமை. இந்த உலகக்கோப்பை வெல்வதற்கு முன்பு ரோகித் அணியில் இருக்கும் எல்லா பிளேயர்களிடமும் பேசினார். இந்த மலையின் உயரத்தை அடைய வேண்டும் என்றால் என்னால் மட்டும் முடியாது. உங்கள் அனைவரின் ஆக்சிஜனும் எனக்கு தேவை என கூறினார். ரோகித்தின் இந்த வார்த்தைகள் தான் அணியை கடைசி வரை வெற்றிக்கு அழைத்துச் சென்றது’’ என தெரிவித்தார்.
இந்திய அணி டி20 உலகக்கோப்பை முதன்முறையாக வென்றபோது அந்த அணியில் ஒரு பிளேயராக இருந்தவர் ரோகித் சர்மா. இப்போது கேப்டனாக டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கிறார். இரண்டு டி20 உலககோப்பை வென்ற அணியில் அணியில் இருந்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது. அவரின் 17 ஆண்டுகால சகாப்தம் நடந்து முடிந்த இந்த டி20 தொடரோடு முடிவுக்கும் வந்திருக்கிறது. இனி 20 ஓவர் போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக ஆடமாட்டார். அவரைத் தொடர்ந்து யார் இந்திய அணியை இந்த பார்மேட்டில் வழிநடத்தப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேப்டன்சி ரேஸில் மொத்தம் 5 பிளேயர்கள் இருக்கின்றனர். ஹர்திக், பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் மற்றும் சுப்மன் கில் என வரிசையாக இருக்கின்றனர். இதில் ஹர்திக், பும்ரா வரிசையில் சூர்யகுமார் யாதவ் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார். அவருக்கு பிசிசிஐ கேப்டன்சி பொறுப்பு கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளின் பட்டியல் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ