ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய சாதனை படைத்தார். நாடு திரும்பிய சாக்ஷி, இன்று அதிகாலை டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். சாக்ஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.
மேலும் சாக்ஷி மாலிக் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட மீரட்டை சேர்ந்த நதீம் நம்பர்தார் மீது உ.த்திர பிரதேஷ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவன் தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றன.
மேலும் ஹாரியான முதல்வர் அவர்கள் "பெண்களை காப்போம், பெண்களை படிக்க வைப்போம்" என்ற அரசின் விளம்பர தூதராக அவரை அறிவித்தார்.
We announce #SakshiMalik as the brand ambassador of Beti Bachao, Beti Padhao initiative in Haryana: CM ML Khattar pic.twitter.com/i0pLVKfnGw
— ANI (@ANI_news) August 24, 2016