ஐபில் தொடரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் DGP மருமகன்...! யார் அவர்?

ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டிஜிபியின் மருமகன், ஐபிஎல் அணியின் கேப்டனாகவும் பொறுபேற்க உள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:26 PM IST
  • கேப்டனாக பொறுப்பேற்கும் டிஜிபியின் மருமகன்
  • 12 கோடிக்கு பஞ்சாப் அணியால் தக்கவைக்கப்பட்டார்
ஐபில் தொடரில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் DGP மருமகன்...! யார் அவர்? title=

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் போட்டி அடுத்த மாதம் மார்ச் 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. பிப்ரவரியில் நடைபெற்ற ஏலத்தில் கோடிகளிலும், லட்சங்களிலும் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் களத்தில் வாண வேடிக்கைகள் காண்பிப்பதை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், டிஜிபியின் மருமகனாக இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர், ஏற்கனவே கோடிகளில் சம்பாதிப்பதோடு, இனி ஒரு அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்க உள்ளார். 

மேலும் படிக்க | விராட் கோலிக்கு அவமரியாதை - பிசிசிஐ மீது கவாஸ்கர் அதிருப்தி

யார் அந்த வீரர்?

மயங்க் அகர்வால் தான் அந்த டிஜிபியின் மருமகன். ஆம், மயங்க் அகர்வாலின் மாமனார் கர்நாடக மாநிலத்தின் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். அவர் பெயர் பிரவீன் சூட். இவரின் மகளான அஷிதாவை திருமணம் செய்திருக்கிறார் மயங்க் அகர்வால். முன்பு போலீஸ் கமிஷனராகவும் தற்போது கர்நாடகாவின் காவல்துறை இயக்குநராகவும் இருக்கிறார். மயங்க் அகர்வாலும், அஷிதாவும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அஷிதா வழக்கறிஞராக உள்ளார்.

மயங்கின் தந்தை CEO

மயங்க் அகர்வால் அடிப்படையாகவே செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர், கோடிக்கணக்கில் ஊதியமாக பெற்று வருகிறார். மயங்க் அகர்வாலின் நிகர மதிப்பு சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 26 கோடி ரூபாயாகும். அவரது தந்தை ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) உள்ளதாக கூறப்படுகிறது. 

பஞ்சாப் கிங்ஸ்

மயங்க் அகர்வாலை இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. கடந்த சீசனில் ஒரு போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், இந்தமுறை முழு சீசனுக்கும் கேப்டனாக செயல்பட உள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, " நான் 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து வருகிறேன். இப்போது இந்த அணிக்கு கேப்டனாக நியமிகப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இதனை முழு மனதுடன் ஏற்று பஞ்சாப் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IPL2022: ஜேசன் ராய் விலகலுக்கான 2 முக்கிய காரணங்கள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News