SRH vs RR: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான்; ஐதராபாத்துக்கு 165 இலக்கு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு தரப்பட்டு உள்ளது. அனல் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு மிக முக்கியமானது. பிளே ஆஃபிற்கு தகுதி பெற வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 27, 2021, 09:44 PM IST
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு தரப்பட்டு உள்ளது.
  • சாம்சன் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் 3,000 ரன்களை கடந்தார்.
  • ஐபிஎல் 2021 தொடரில் 400 ரன்களை பூர்த்தி செய்தார் சாம்சன்.
SRH vs RR: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான்; ஐதராபாத்துக்கு 165 இலக்கு title=

புது டெல்லி: கேப்டன் சஞ்சு சாம்சனின் அரை சதத்தின் இன்னிங்ஸின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 164/5 ஸ்கோரை பதிவு செய்தது. சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார்.

சாம்சனைத் தவிர, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (36) மற்றும் மஹிபால் லோமர் (29*) ஆகியோரும் முக்கியமான பங்களிப்பைச் செய்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் சித்தார்த் கவுல் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் எவின் லூயிஸ் (6) வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.

முதல் விக்கெட் 11 ரன்களுக்கு விழுந்த பிறகு, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் என்ற வலுவான கூட்டணியை உருவாக்கினார்.

ALSO READ | தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!

ஒன்பதாவது ஓவரில் பந்துவீசிய சந்தீப் சர்மா, இந்த கூட்டணியை முறித்தார். ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோனும் (4) ரஷீத் கானிடம் சிக்கி வெறும் நான்கு ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

77 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்காக கேப்டன் சாம்சன் பொறுப்பாக ஆடினார். ஐபிஎல் 2021 தொடரில் 400 ரன்களை பூர்த்தி செய்த சாம்சன் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3,000 ரன்களை கடந்தார்.

சாம்சன், மஹிபால் லோமருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.

ALSO READ | சிக்கலில் சஞ்சு சாம்சன்; வறுத்தெடுக்கும் BCCI

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு தரப்பட்டு உள்ளது. அனல் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு மிக முக்கியமானது. பிளே ஆஃபிற்கு தகுதி பெற வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News