ஏலம் எடுக்கப்படாமல் ஐபிஎல் விளையாடும் 3 வீரர்கள்

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாத 3 வீரர்களுக்கு, இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 22, 2022, 02:23 PM IST
  • ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாத 3 வீரர்கள்
  • இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுகின்றனர்
  • முன்னணி வீரர்கள் விலகலால் அடித்தது அதிர்ஷ்டம்
ஏலம் எடுக்கப்படாமல் ஐபிஎல் விளையாடும் 3 வீரர்கள்  title=

15வது ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த மாதம் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பலரை அனைத்து அணிகளும் போட்டி போட்டு பல கோடிகள் செலவழித்து தூக்கின. இளம் வீரர் இஷான் கிஷனுக்கு இந்த ஆண்டு ஐபிஎல்லில் மெகா ஜாக்பாட் அடித்தது.

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கும் கோடிகள் பறந்தன. தோனியை விட அதிக தொகை கொடுக்கப்பட்டு சென்னை அணிக்காக அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் முன்னணி வீரர்கள் சிலர் எதிர்பார்த்த தொகைக்கு ஏலம் எடுக்கப்படவில்லை. ரெய்னா மற்றும் ஆரோன் பிஞ்ச் உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் எடுக்காதது வியப்பாக இருந்தது. அப்படியிருந்தும், ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடித்து, அவர்கள் ஐபிஎல் போட்டி விளையாட உள்ளனர்.

மேலும் படிக்க | ஒரு ஓவரால் முடிவுக்கு வந்த இந்திய வீரரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை

ஆரோன் பின்ச்

ஆரோன் பிஞ்ச், ஆஸ்திரேலியாவின் கேப்டனாகவும், ஐபிஎல்லில் கிட்டதட்ட 8 அணிகளில் விளையாடிவருமான இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஆனால், திடீர் அதிர்ஷ்டம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். கொல்கத்தா அணி இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகள் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். ஹேல்ஸூக்கு பதிலாக இப்போது பின்ச் விளையாட இருக்கிறார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ்

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜேசன் ராயை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியிருந்தது. அவரும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததார். ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகளில் உடன்பாடில்லை எனத் தெரிவித்திருந்தார். இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை குஜராத் அணி எடுக்கும் என எதிர்பார்த்திருந்ந நிலையில், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அழைக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக ஆப்கானிஸ்தான் அணிக்கு இருக்கிறார்.

முஜர்பானி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடிருந்திருந்த மார்க்வுட், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது.  இவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முஜர்பானி வூட்-ஐ லக்னோ நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. 

மேலும் படிக்க | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு வரும் அதிரடி வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News