தொடர் வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி - மனக்குமுறலுக்கு காரணம் இதுதான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியிருந்தாலும், தோனி இன்னும் மன வருத்தத்தில் தான் இருக்கிறார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2022, 11:36 AM IST
  • வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி
  • முன்கூட்டியே வெற்றி பெற்றிருக்க வேண்டும்
  • அடுத்த 3 போட்டிகளிலும் முழு கவனம்
தொடர் வெற்றிக்குப் பிறகு வருந்தும் தோனி - மனக்குமுறலுக்கு காரணம் இதுதான்  title=

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றிருப்பதால், அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் எஞ்சியிருக்கிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெவோன் கான்வோய் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஃபார்ம்முக்கு திரும்பியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க | ஆர்சிபி வெற்றி பெற்றாலும் முட்டைகளில் கோலோச்சும் கோலி

பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் பழைய சிஎஸ்கேவாக இருப்பதால், அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை இறுதி செய்வது தான் சென்னை அணியின் தற்போதைய இலக்காக உள்ளது. அதேநேரத்தில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது குறித்து நேற்றைய போட்டிக்குப் பிறகு பேசிய தோனி, "பாயிண்ட்ஸ் டேபிளை பற்றி தங்களுக்கு கவலையில்லை. எங்களுடைய கவனம் முழுவதும் அடுத்த 3 மூன்று போட்டிகளில் தான் உள்ளது. 

அதில் வெற்றி பெற முயற்சிப்போம். அதேநேரத்தில் மற்ற அணிகளின் வெற்றி - தோல்வி குறித்து நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் சரியாக விளையாடினால் போதும். பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை என்றால், அத்துடன் உலகம் நின்றுவிடப்போவதில்லை. என்னுடைய ஒரே வருத்தம் இந்த வெற்றிகளை முன்கூட்டியே பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்"  கூறினார். தோனியின் இதே கவலை தான் ரசிகர்களுக்கும் இருக்கிறது. இப்படி விளையாடி முன்கூட்டியே ஒரு சில வெற்றிகளை பெற்றிருந்தால், இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்று கன்பார்ம் ஆகியிருக்கும். 

மேலும் படிக்க | "ஐ டோன்ட் லைக் 'DUCK’, பட் 'DUCK' லைக்ஸ் மீ"- வைரலாகும் விராட் கோலி மீம்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News