T20 World Cup: கோலியுடன் கங்குலி திடீர் ஆலோசனை; இதுதான் காரணமா

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இரண்டாவது டெஸ்டின் போது கேப்டனுடன் முறையான சந்திப்பை நடத்தினர், இதில் டி 20 உலகக் கோப்பை தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2021, 09:05 AM IST
T20 World Cup: கோலியுடன் கங்குலி திடீர் ஆலோசனை; இதுதான் காரணமா title=

இந்திய அணியின் முழு கவனமும் தற்போது இங்கிலாந்தில் நடப்பு டெஸ்ட் தொடரை வெல்வதில் உள்ளது, ஆனால் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) உயர் அதிகாரிகள் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை பற்றி விவாதித்து வருகின்றனர். 

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதலில் நடக்கவிருந்த உலகக்கோப்பை தொடர் தற்போது அமிரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அடங்கிய முதல் சூப்பர் 12 சுற்று வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் தொடங்குகிறது.

ALSO READ | ICC T20 World Cup 2021: போட்டிகளுக்கான அட்டவணை

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளும் முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பைகான 15 பேர் கொண்ட அணியையே அறிவித்துவிட்டது. ஆனால் பிசிசிஐ (BCCI) மட்டும், இன்னும் வீரர்கள் தேர்வில் எவ்வித அக்கறையும் காட்டாமல் இருக்கிறது. 

இதற்கிடையில் இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியி மற்றும் பிசிசிஐ மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த அலோசனையானது இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது  மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனையின் போது, ஐபிஎல் தொடரின் போது வீரர்களின் ஃபார்மையும், அவர்கள் அரப நாடுகளில் எப்படி செயல்படுவார்கள் என்பது உறுதியாகிவிடும். எனவே மூத்த வீரர்களை அங்கு கன்ஃபார்ம் செய்துக் கொள்ளலாம். ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதே போல இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார், போன்ற வீரர்கள் தயார் நிலையில் உள்ளதால் பிசிசிஐ-க்கு சற்று கடினமான வேலை வந்துள்ளது.

செப்டம்பர் 14 வரை இந்தியா டெஸ்ட் தொடரை விளையாடும், அதன் பிறகு வீரர்கள் ஐபிஎல்லில் அந்தந்த அணிகளுடன் பிஸியாக இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், அதிகாரிகள் கோலியுடன் ஆலோசனை நடத்தியது ஆச்சரியமில்லை.

ALSO READ | வேகத்தில் மிரட்டும் இந்திய பவுலர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News