இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக 3 டி20 போட்டியிலும் தோல்வியுற்று தொடரை இழந்தது. இதனையடுத்து இன்று, முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோஹ்லி தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். விராட் கோஹ்லியின் இந்த சாதனைக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டி தொடங்குவதற்கு முன் அவர் பெயர் பொறித்த தொப்பியை பயிற்சியாளர் டிராவிட் வழங்கினார். மைதானத்தில் விராட் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து இதனை பெற்றுக் கொண்டனர். முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
What a moment to commemorate his 100th Test appearance in whites
Words of appreciation from the Head Coach Rahul Dravid and words of gratitude from @imVkohli#VK100 | #INDvSL | @Paytm pic.twitter.com/zfX0ZIirdz
— BCCI (@BCCI) March 4, 2022
மேலும் படிக்க | டெஸ்ட் கேப்டனாக ரோஹித்! கோலியின் பங்கு என்ன?
100வது டெஸ்டில் விளையாடுவது தவிர கோலி மற்றொரு சாதனையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கோஹ்லி, நாட்டிலேயே ஐந்தாவது வேகமாக இந்த சாதனை செய்த வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார். சச்சின் டெண்டுல்கர் (15921), ராகுல் டிராவிட் (13288), சுனில் கவாஸ்கர் (10122), விவிஎஸ் லக்ஷ்மண் (8781), வீரேந்திர சேவாக் (8586) ஆகியோருடன் கோஹ்லி 8000 ரன்களைக் கடந்து உள்ளார். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 33வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
.@imVkohli breaches another milestone on his momentous day.
8000 and counting runs in whites for him #VK100 @Paytm #INDvSL pic.twitter.com/EDZz9kPZwy
— BCCI (@BCCI) March 4, 2022
மேலும், சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலீப் வெங்சர்க்கார் (116), சவுரவ் கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103) மற்றும் வீரேந்திர சேவாக் (103) ஆகியோருக்குப் பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12வது இந்தியர் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வரும் கோஹ்லி, தனது 100வது டெஸ்ட் போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 45 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோஹ்லி அவரது 100வது போட்டியில் சதம் அடிக்கமாட்டார், 45 ரன்களில் அவுட் ஆவார் என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் முன்கூட்டியே பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Kohli Won't score a 100 in his 100th test. Will score 45 (100) with 4 gorgeous cover drives and then Embuldeniya will knock his stumps over and he'll pretend to be shocked and will nod his head in disappointment
— shruti #100 (@Quick__Single) March 3, 2022
மேலும் படிக்க | மொஹாலி மைதானத்தில் இந்திய அணியின் சாதனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR