டி20 தொடரில் இலங்கைக்கு எதிராக கிளீன் ஸ்வீப் செய்த இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 போலவே டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கிறது. மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று முதல் மோத உள்ளன. 1994-க்குப் பிறகு மொஹாலியில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இதுவரை தோற்றதில்லை. முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Captain Rohit Sharma wins the toss and elects to bat first in the 1st Test.
A look at our Playing XI for the game.
Live - https://t.co/c2vTOXSGfx #INDvSL @Paytm pic.twitter.com/nFF8wANXiV
— BCCI (@BCCI) March 4, 2022
மேலும் படிக்க | டெஸ்ட் கேப்டனாக ரோஹித்! கோலியின் பங்கு என்ன?
இந்த போட்டியில், தனது 100வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி மீது அனைவரது பார்வையும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரன்கள் அடிக்க சிரமப்படும் கோலி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100வது டெஸ்ட் போட்டியில் கோலி தனது 71வது சதத்தை அடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 33 வயதான கோலி 99 டெஸ்ட் போட்டிகளில் 50.39 சராசரியுடன் 27 சதங்களுடன் 7,962 ரன்களை குவித்துள்ளார். இருப்பினும், கோலியால் 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதத்தை கூட பதிவு செய்ய முடியவில்லை.
இந்திய டெஸ்ட் கேப்டனாக முதல் முறையாக ரோஹித் சர்மா களமிறங்க உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்து இருந்தது. இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினர். இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். தற்போது இலங்கை முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி:
ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ்
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா(C), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், கே உல்தீப் யாதவ், , பிரியங்க் பஞ்சால், ஸ்ரீகர் பாரத், சௌரப் குமார்.
மேலும் படிக்க | விராட் கோலிக்கு அவமரியாதை - பிசிசிஐ மீது கவாஸ்கர் அதிருப்தி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR