பாக்கிஸ்தான் ரசிகர்களையும் விட்டு வைக்காத கோலி!

உண்மையில், இந்த பட்டியலை பார்த்த பல பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்  கோலிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Dec 16, 2017, 05:31 PM IST
பாக்கிஸ்தான் ரசிகர்களையும் விட்டு வைக்காத கோலி!

கடந்த வருடத்தில் பாக்கிஸ்தானில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தான் என கூகிள் ட்ரண்ட் அறிவித்துள்ளது.

கோலி 29-வயது இளம் கிரிக்கெட் வீரர். உலக கிரிக்கெட் ரசிகர்களின் முடிசூட அரசன். கிரிக்கெட் ஜாம்பவான் பலர்கள் படைத்த சாதனைகளை தன் இயல்பான ஆட்டத்தால் முறியடித்து வருபவர். ஆனால் இவரது சாதனையை எட்ட மற்ற வீரர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாக்கிஸ்தானில் ஒரு பாக்கிஸ்தான் வீரருக்கு கிடைக்காத பெருமை இவருக்கு எப்படி?... காரணம் மற்ற நாட்டு வீரர்களுடன் ஓர் ஆரோக்கியமான உறவை இவர் கடைப்படிப்பது தான்!

இந்த பட்டியலில், இவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், அஹ்மத் ஷெஸாட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உண்மையில், இந்த பட்டியலை பார்த்த பல பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் (கடந்தகால மற்றும் தற்போதைய) கோலிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதுவே கோலியின் ஆரோக்கிய உறவுக்கு சான்றாக அமைந்துள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 11-ம் நாள் இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில், தன் குடும்பத்தார் முன்னிலையில் கோலி, அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News