சுயநலவாதியா விராட் கோலி... சூர்யகுமார் ரன் அவுட்டுக்கு யார் காரணம்?

Virat Kohli vs Suryakumar Yadav: நியூசிலாந்து அணியுடான நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானதற்கு விராட் கோலியின் சுயநலம்தான் காரணம் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 23, 2023, 11:24 AM IST
  • சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையில் முதல் போட்டியை நேற்று விளையாடினார்.
  • அவர் 2 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.
  • ஆட்ட நாயகனாக ஷமி தேர்வானார்.
சுயநலவாதியா விராட் கோலி... சூர்யகுமார் ரன் அவுட்டுக்கு யார் காரணம்? title=

Virat Kohli vs Suryakumar Yadav: நடப்பு உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) இந்தியா - நியூசிலாந்து அணிகள் (IND vs NZ) மோதிய லீக் போட்டி நேற்று நடைபெற்றது. தரம்சாலா நகரில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

மேலும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே தழுவாமல் மிக வலுவான நிலையிலும் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்திய அணி நேற்று சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ஷமியின் 5 விக்கெட்டுகள் நியூசிலாந்தை 274 ரன்களுக்கு தடுத்தது எனலாம். சேஸிங்கில் விராட் கோலி தொடர்ந்து பெரிய பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து வெற்றியை தேடித் தந்தார்.

சாதனையை தவறவிட்ட கோலி 

ஒருவேளை நியூசிலாந்து 300 ரன்களை தாண்டியிருந்தால் நேற்றைய வெற்றி இந்தியாவுக்கு சற்று கடினமாக இருந்திருக்கலாம். பந்துவீச்சு சிறப்பாக இருந்த காரணத்தினாலேயே இந்தியா நேற்று வெற்றி பெற்றது. குறிப்பாக, ஆட்ட நாயகன் விருதும் (Player Of The Match) ஷமிக்கே வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க | வீழ்ந்தது நியூசிலாந்து... 20 வருட பகையை தீர்த்தது இந்தியா - சாதனை சதத்தை தவறிவிட்ட கோலி!

இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி (Virat Kohli) நேற்று 95 ரன்களை அடித்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அவர் சதம் அடிக்க பெரிய ஷாட்டிற்கு போக டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் நேற்று சதம் அடித்திருந்தால், ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன்செய்திருப்பார். இருப்பினும், அவர் சதத்தை தவறவிட்டாலும் அதற்கு முன் நடந்த ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் பல விமர்சனங்களை கிளப்பியது.

விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் 

34ஆவது ஓவரில் போல்ட் வீசிக்கொண்டிருந்தார். அந்த 5ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) பேட்டிங் செய்தார். அந்த பந்தை அவர் சற்று அருகில் நின்ற சான்ட்னரிடம் அடித்து ஒரு ரன்னுக்கு ஓடினார். விராட் கோலியும் ஓடத் தொடங்கினார். ஆனால் விராட் கோலி சான்ட்னர் (Mitchell Santner) பந்தை பிடித்துவிட்டதை பார்த்து ரன் ஓடுவதை நிறுத்திவிட்டு, நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு ஓடத் தொடங்கினார். சான்ட்னர் பந்தை பந்துவீச்சாளரிடம் தூக்கிப்போட, அதை பிடித்த போல்ட் கீப்பர் லாதமிடம் உருட்டிவிட்டார். பாதி தூரத்திற்கு வந்துவிட்ட சூர்யகுமார் தடுமாறி மீண்டும் ஸ்ட்ரைக்கர் முனைக்கு ஓடுவதற்குள் ரன்அவுட் (Run Out)செய்யப்பட்டார்.

சுயநலமா...?

சூர்யகுமார் தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் பேட்டிங் செய்த நிலையில், 2(4) ரன்களில் வெளியேறியது அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்திருக்கும். விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இடையே அந்த கணத்தில் முறையான கம்யூனிகேஷன் இல்லாததால் அந்த ரன் அவுட் நிகழ்ந்தது. விராட் கோலி முன்னரே சூர்யகுமாரை வர வேண்டாம் என சொல்லியிருக்கலாம் என பலரும் அவர் மீது புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், X தளத்தில் Selfish என்றும் விராட் கோலியை டிரெண்ட் செய்து வந்தனர்.

வரலாற்று வெற்றி

இருப்பினும், விராட் கோலி சுதாரிப்பதற்கு முன்னரே சூர்யகுமார் வந்துவிட்டார், ஆனால் ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், சதம் அடிக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் சூர்யகுமார் விக்கெட்டை காவு கொடுத்துவிட்டார் என விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், விராட் கோலி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்தார் எனலாம். கடந்த 20 ஆண்டுகளில் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியை இந்தியா முதல் முறையாக வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மறக்க முடியாத ரன் அவுட்... குழந்தையை போல் அழுத தோனி - 2019 சோகக்கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News