வெனிசுலாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, விளையாட்டு வீரர் மார்டினென், அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
பிரேசிலுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி தொடக்க வரிசையில் பல மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக அணியின் மேலாளர் லியோனல் ஸ்கலோனி தெரிவித்தார்.
ஆனால் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் உடற்தகுதி குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். சவோ பாலோவின் கொரிந்தியன்ஸ் (Sao Paulo's Corinthians) அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் மெஸ்ஸி காயமடைந்தார்.
இதற்கு முன்னதாக, தென் அமெரிக்க தகுதிப் போட்டிகளில் அர்ஜென்டினா, வெனிசுலாவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. பிரேசில், சிலி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
READ ALSO | பாலியல் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பதில் என்ன?
"போட்டிகளுக்கு இடையிலான குறுகிய இடைவெளி காரணமாக சில மாற்றங்களைச் செய்வதே யோசனை" என்று ஸ்காலோனி சனிக்கிழமை ஆன்லைனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், "பயிற்சியிக்கு பிறகு வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம்" என்றும் தெரிவித்தார்.
எஸ்டேடியோ ஒலிம்பிகோவில் வியாழக்கிழமை நடந்த போட்டியின் முதல் பாதியில் அட்ரியன் மார்டினெஸால் காயமடைந்த 34 வயதான மெஸ்ஸி மீண்டும் விளையாடுவார் என்று ஸ்காலோனி கூறினார்.
மெஸ்ஸியின் இடது முழங்காலுக்குக் கீழே தாக்கிய Adrian Martinez சிவப்பு அட்டையை பெற்றார். அடிபட்டு கீழே விழுந்த மெஸ்ஸியால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் எழவே முடியவில்லை.
மெஸ்ஸி காயமடைந்த கவலைக்குரிய கணத்தின் வீடியோ:
Entrada no mínimo criminosa do venezuelano no Messi. Que loucura!pic.twitter.com/2QvGx5KxFH
— André Hernan (@andrehernan) September 3, 2021
"லியோ நன்றாக இருக்கிறார், அது அவரைப் பார்த்தால் பயமாக இருந்தது, ஆனால் அவர் மீண்டும் எழுந்து நிற்பார். அவர் 100% ஆடுகளத்தில் நிற்பார், அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறோம்" என்று ஸ்கலோனி கூறினார்.
ரியோ டி ஜெனிரோவின் மரகானா ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை தகுதிபெறும் போட்டி முதல் போட்டியாளர்களுக்கிடையேயான முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் தற்போது 10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க தகுதி குழுவில் ஏழு வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, இரண்டாவது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை விட ஆறு புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
அடுத்த ஆண்டு கத்தாரில் நடக்கும் கால்பந்து போட்டியின் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும். ஐந்தாம் இடத்தைப் பிடிக்கும் அணி கண்டங்களுக்கு இடையேயான பிளேஆஃப் சுற்றில் முன்னேறும்.
ALSO READ | நீரஜ் சோப்ராவின் நினைவாக நாணயத்தை வெளியிடலாமே?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR