10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!
ஒரு சிலரை தவிர 10 ஆம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையத்துக்கு வேனில் அழைத்து வரப்படுவர். தேர்வு அறையில் தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
REDA | ஆசிரியரா நீங்கள்?.. மாதம் ₹.1 கோடி வரை சம்பாதிக்க ஒரு அறிய வாய்ப்பு...
ஜுன் 15 ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வும், 16 ஆம் தேதி 11 ஆம் வகுப்பின் விடுபட்ட பாடத்துக்கான தேர்வும் அதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த கடைசித் தேர்வை எழுத முடியாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்... “10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும். மேலும், தற்போது பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.