14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்

ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 12:10 PM IST
  • 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு
  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்
  • 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம் title=

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் (M Karunanidhi) 98வது பிறந்தநாளை இன்று முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

ரேஷன் கடைகளில் (Ration Shopsஅளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம் இங்கே காண்க.,

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்​

சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ 
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம் 
கடலை பருப்பு- 250 கிராம் 
டீ தூள் -200கிராம் 
கடுகு- 100 கிராம் 
சீரகம்- 100 கிராம் 
மஞ்சள் தூள்- 100 கிராம் 
மிளகாய் தூள்- 100 கிராம் 
குளியல் சோப்பு 25 கிராம் – 1 
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை இந்த 14 மளிகை பொருட்களில் அடங்கும்.

இந்நிலையில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும், கொரோனா வைரசால் (Coronavirus) இறந்த மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் நீதிபதி குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News