கர்நாடக அணைகளில் இருந்து 2.06 லட்சம் கன அடி நீர் திறப்பு!!

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சம் கனஅடியில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 09:30 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து 2.06 லட்சம் கன அடி நீர் திறப்பு!! title=

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சம் கனஅடியில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!!

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகா இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. 

பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் விவரகாரத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் 1892- ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை தீர்வு காணமல் வருகிறது. 

சமீபத்தில் உச்சநீதிமன்றம் காவிரி நீர் எந்த ஒரு மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்றும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது. பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டும் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாமல் பிடிவாதமாக இருந்து வந்தது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன.

இதையடுத்து, கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு நீர் திறப்பு 2 லட்சம் கனஅடியில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 86,900 கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

 

Trending News