கள்ளச் சாராய மரணங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்: எடப்பாடி பழனிச்சாமி

கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 24, 2024, 01:55 PM IST
  • சட்ட விதிகள் மக்களுக்காகத்தான் சட்டங்களும் மக்களை வாழவைக்க போட சட்டம் தான்.
  • மாவட்ட ஆட்சியர் பேட்டியில் கள்ள சாராயத்தால் உயிர் இழக்கவில்லை என்று பொய் பேசினார்.
  • சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்.
கள்ளச் சாராய மரணங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்: எடப்பாடி பழனிச்சாமி title=

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிக்கு பழனிச்சாமி ஆற்றிய உரை...

கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்ட நிகழ்வு நடந்ததற்கு யார் காரணம் முழுக்க முழுக்க திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தான் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் தமிழக முழுவதும் போதை பொருள் நடமாட்டம் போதைப்பொருள் விற்பனை கள்ளச்சாராயம் அதிகரிப்பு கள்ளச்சாராம் குடிப்பவர்களின் இறப்பை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் தலைமை கழகத்தில் கூட்டம் போடுகிறார் அந்த கூட்டத்திலே உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். செய்தி ஊடகம் பத்திரிக்கையில் வருகிறது. இனி தமிழகத்தில் போதை பொருள் விற்பனை நடமாட்டம் அடியோடு ஒழிக்கப்படும் கள்ளச்சாராயம் அடியோடு ஒழிக்கப்படும் என்கின்ற செய்தியை மட்டும் பார்க்கின்றோம். ஆனால் ஒழித்தார்களா என்று சொன்னால் இல்லை. தடை இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் கவலைப்படாத முதலமைச்சர் தான் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

இன்றைக்கு இந்த பகுதியை பொருத்தவரையில் மாதவச்சேரி,சேஷ சமுத்திரம் கருனாபுரம் பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்கு அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில், மாவட்ட காவல்துறை அலுவலகம் இருக்கின்ற இந்த பகுதியில் தங்கு தடை இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இன்றைக்கு அதிகாரிகளை இந்த ஆட்சியாளர்கள் ஆட்டி படைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் இருக்கின்ற முக்கிய புள்ளிகளின் துணையோடு தான் விற்பனை நடைபெற்றதாக, நான் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விருத்தபோது அந்த மக்கள் இந்த செய்தியை சொன்னார்கள். சொன்னது போல காவல் நிலையத்திற்கு அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த ஆட்சியாளர்கள் அடாவடித்தனம் அராஜகம், இவர்களுடைய அலட்சியத்தின் காரணமாக தமிழகத்தை ஆளுவதால் கள்ளக்குறிச்சி  நகரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 58 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

58 பேர் இறந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த 58-ற்க்கும் பொறுப்பேற்றுக்கொள்வது அரசாங்கத்தின் கடமை. 58 குடும்பம் நடுத்தெருவிற்கு வந்ததற்கு காரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காரணம். சிகிச்சை பெற்றுக் கொண்டு வருபவர்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.. இப்போது கூட செய்தி சொல்கிறார்கள் மேலும் ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள் தற்போது 59 ஆகிவிட்டது என்று சொல்லுகிறார்கள்.

மேலும் படிக்க | மாதவரத்தில் இருந்து மெத்தனால் சப்ளை.. 4 பேரை கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார்

முதலமைச்சர் அடக்கு முறையை கையாளுகிறார்.. நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இடையூறு செய்து கொண்டிருக்கிறார்.  தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க ஆர்ப்பாட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே காற்றை தடை செய்ய முடியாது. அதுபோல் மக்களுடைய கொந்தளிப்பை நீங்கள் தடை செய்ய முடியாது இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் மிக விரைவிலே வரும்.. யாருக்காக குரல் கொடுக்கின்றோம் பாதிக்க பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறோம். 

ஆர்ப்பாட்டம் எதற்காக நடைபெறுகிறது அரசாங்கத்தை தட்டி எழுப்பி இனிமேல் நீ தூங்காதே விழிப்போடு செயல்படு மக்களுடைய உயிர் பறிபோகுது குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் ஏழை மக்களுடைய உயிர் பறிபோகிறது அதையெல்லாம் காக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். அது மட்டும் அல்ல நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னால் இங்கு இருக்கின்ற காவல் துறையை வைத்து தடுக்கிறார்கள். அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் மூலமாக நீதி கிடைக்காது. 

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள்  இருக்கிறார்கள் அதை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் சிபிஐ நீதி விசாரணை வரவேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்ற விசாரணைக்கு நாங்கள் கூறியது போல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது இறந்தவர்களின் நிலை என்ன? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன சிகிச்சை பெறுவர்களின் நிலை என்ன என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதியரசர் கூறியிருக்கிறார். 

மக்களுக்கு எப்போது துன்பம் துயரம் வருகிறதோ அப்போது எல்லாம் தட்டி கேட்கின்ற கட்சி தான் அதிமுக அதற்காக எத்தனை தியாகளும் நாங்கள் செய்ய தயார். அதிமுக கட்சி அப்படிப்பட்ட கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிர் இழந்தார்கள் என்று சொன்னால் அதற்கு நீதி கேட்பது என்ன தவறு அதற்காக போராட்டம் நடத்தினால் நீங்கள் முடக்குவீர்களா ஸ்டாலின் அவர்களே இதற்கெல்லாம் அண்ணா திமுக அஞ்சாது, ஸ்டாலின் அவர்களே அடக்குமுறை கண்டு அஞ்சுவார்கள் நாங்கள் இல்லை. பல போராட்டத்தை சந்தித்தவர்கள் சிறை சென்றவர்கள் நீதியை நிலை நாட்டுவதற்காக அண்ணா திமுக போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. 

முதலில் மூன்று பேர் மரணம் அடைந்தபோது.. மாவட்ட ஆட்சியர் பேட்டியில் கள்ள சாராயத்தால் உயிர் இழக்கவில்லை என்று பொய் பேசினார். அவர் உண்மை பேசியிருந்தால் எவ்வளவு உயிர் போய் இருக்காது. அரசியல் அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் பச்சை பொய்யை சொல்லிய காரணத்தினால் இந்த கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மாவட்ட ஆட்சியரின் செய்தியை கேட்டு சிகிச்சை பெறாமல் இருந்து விட்டார்கள். மாவட்ட ஆட்சியர் என்ன சொன்னார் என்பதை மக்கள் நம்பினார்கள். மீண்டும் மீண்டும் மதுவை குடித்தார்கள் அதனால் தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்படுகிறது. 

அரசின் அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் இப்படி பொய் சொல்லுகிறார். இன்றைய தினம் நிலை குலைந்து போய் இருக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் யாருடைய புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. கட்சியினர் ஆதரவில் தான் கள்ளச்சாராயம் விற்பனையானது என்பது உறுதியாகிறது. நாட்டில் என்ன நடக்கிறது ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். கடுமையாக இரும்பு கரம் கொண்டு தடுத்து இருந்தால் கலாச்சாராயம் போதை பொருளை தடுத்து நிறுத்தலாம். நாங்கள் திட்டமிட்டு இந்த போராட்டத்தை நடத்தவில்லை உங்களுடைய கையால் ஆகாத தனத்தால் தான் இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது அதனால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதற்கு யார் பொறுப்பு முதலமைச்சர்தான் பொறுப்பு.

அதிமுக எதிர் கட்சி தலைவராக நான் இருக்கின்றேன் சட்டமன்றத்தில் 58 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் யார் உடந்தையாக இருந்தவர்கள் யார் அரசின் கவனத்திற்கு கொண்டுவர சட்டமன்றத்தில் நான் பேச நினைத்தேன். ஆனால் சட்டசபை சபாநாயகர் மக்கள் பிரச்சனையை மட்டும் தான் பேச வேண்டும் என்று சொல்கிறார். இதுவும் மக்களுடைய பிரச்சினைதானே அதைத்தான் நாங்க பேச நினைத்தோம். சட்டமன்றத்தில் பேச அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை எங்களை எல்லாம் வெளியேற்றினார். 

சட்ட விதிகள் மக்களுக்காகத்தான் சட்டங்களும் மக்களை வாழவைக்க போட சட்டம் தான். ஆனால் இவர்கள் சர்வாதிகார போக்கை கடைபிடித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டத்திற்கு புறம்பாக பேசுகிறார் என சொல்லுகிறார்கள். சட்டமன்ற மரபுகளை மீறி அநாகரிகமாக நடந்து கொள்ளுகின்றவர்கள் மரபுகளை மதிக்கக்கூடிய கட்சி அதிமுக கட்சி.  கேள்வி எழுப்புவதற்காக தான் சட்டமன்றம் 

பாதிக்கப்பட்டவர்களை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை முறையான சிகிச்சை அளித்திருந்தால் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஸ்டாலினை போல் நான் அல்ல..அவரை போன்று முதலமைச்சராக இருந்ததில்லை... என்ன மருந்தை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் குணமடைந்து இருப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். 

ஏழை மக்களின் உயிரை துச்சம் என நினைக்கிறார்கள் இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும்போது நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்திருக்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டுமென முயற்சி மேற்கொண்ட முன்னாள் எஸ்பி அவர்களுக்கு உயர் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை அதனால் மனம் உடைந்த அதிகாரி விருப்ப ஓய்வு பெற்று சென்றுள்ளார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உண்மையை நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று நாங்கள் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கின்றோம். இவர்கள் இருக்கும் வரை கள்ளச்சாராயத்தை போதை பொருளை ஒழிக்க முடியாது.. ஏனென்றால் கட்சி காரன் தான் எல்லாத்தையும் செய்கிறான். மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை படிக்கின்ற முதல்வர் எப்படி நாட்டை காப்பாற்றுவார். அதனால் தான் பதவி விலக வேண்டும் என்று சொல்கிறோம். 

கள்ளச்சாராயம் உயிரிழப்பை பார்த்து நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டும் இன்னும் அவர்கள் வெளியிடவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் கள்ளச்சாராயம் அதிகம் ஏனென்றால் ஆளுங்கட் புள்ளிகள் அதற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும். ஒரே இடத்தில் 28 உடல்கள் எரியூட்டபட்டது தான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் துணை போவதால் தான் போதை பொருளை ஒழிக்க முடியவில்லை. போதை பொருட்கள் மாத்திரை அளவில், சாக்லேட் அளவில், ஊசி அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதையெல்லாம் அகற்ற வேண்டும் என்றால் முதலமைச்சர் பதவி விலக வேண்டும். ஒரே நேரத்தில் இந்த தமிழகத்தில் இவ்வளவு மரணம் ஏற்பட்டது கிடையாது. அந்த சாதனையை இந்த  தி.மு.க அரசு செய்து காட்டிவிட்டது என பேசினார்.

மேலும் படிக்க | பாமக தலைவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானநஷ்ட வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News