மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுயநலம் கொண்ட நபர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியவர் எடப்பாடி தான். எனவே, 99% கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள்” என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறியதாவது:
தொண்டர்கள் என்னிடம் உள்ளனர் என்று எதுவுமே புரியாத நபரை போல வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழுவவில் பங்கேற்க முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் என குழந்தை தனமான பதிலை சொல்கிறார். எனவே, அவர் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்து விட்டார். அதிமுக யாருடைய அப்பா வீட்டு சொத்து என கேட்கிறார் ஓ.பி.எஸ். அவர் ஏன் அவருடைய சொந்த வீட்டில் திருடினார்? என வினவினார்
மேலும் படிக்க | தமிழகம் கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக உள்ளது: முதல்வர் முக ஸ்டாலின்
ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார். தலைமை மேல் ஆசை இல்லை என்று அவர் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம் தான். அது தொண்டர்களிடம் எடுபடாது. அவருடைய இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல் தான் தற்போதை நடவடிக்கைகள் எல்லாம். சாமானிய தொண்டனாக இருந்து எம்.எல்.ஏ. ஆனவர் உசிலம்பட்டி ஐயப்பன். திருவிழாவில் மிட்டாயை காட்டி சிலர் குழந்தைகளை அழைத்து சென்று விடுவர். அப்படித்தான் தவறான வழியில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவளித்துள்ளார்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ