கொரோனா வைரஸின் அழிவு உலகிலும் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்களின்படி இதுவரை, இந்த ஆபத்தான வைரஸின் மொத்தம் 21,393 வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. 4,258 பேர் இந்த நோயால் குணமாகியுள்ளனர். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த கொடிய நோய் இதுவரை நாட்டில் 681 உயிர்களைக் கொன்றது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இந்த தொற்று அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமுதாய விலகலை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகலள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கான தயாரிப்புகள், போக்குவரத்து, விற்பனை தவிர வேறு எதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ALSO READ: கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது: EPS
இந்நிலையில் தற்போது மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டதுடன் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.