தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635-லிருந்து 662 ஆக உயர்வு...
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 23,760 பேரும், அரசு கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர். ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 946 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதில் 18 பேர் மரணமடைந்துள்ளனர். இது 1.5 என்ற சதவீதத்தை விட குறைவாகும். தமிழக மருத்துவத் துறையின் சாதனை என்று இந்த விஷயம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பழங்கள், உள்ளிட்டவை பரிசாக வழங்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டியலை சுகாதாரத்துறை இன்று வெளியிடவில்லை. நாளைய அறிக்கையில் தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.