சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள MGR, ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது, நாங்கள் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றை வருடங்கள் ஆகிவிட்டது, இந்த காலத்தில் "அம்மா" அவர்கள் வழியில் தான் ஆட்சி நடத்தி வருகிறோம். நான்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. என் மீது ஊழல் குற்றம் சாட்டி அவப்பெயர் ஏற்ப்படுத்த பார்க்கிறது திமுக. ஆனால் அவர்களின் பகல்கனவு பலிக்காது.
எப்படியாவது அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என்று திட்டம் போட்டு செயல்படுகிறார் மு.க. ஸ்டாலின். ஆனால் அது எதுவும் நிறைவேறவில்லை. தற்போது என்மீது பொய்யான புகார் செய்துள்ளனர். இந்த புகாரை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். மீண்டும் திமுகவுக்கு தோல்வி ஏற்ப்படும்.
திமுக கட்சியை பொருத்த வரை, அது ஒரு குடும்ப அரசியலை கொண்டது. அந்த கட்சியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மட்டுமே உயர்பதவி வகிக்கமுடியும். அதில் முன்பு கருணாநிதி, தற்போது மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி என வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால் அதிமுக கட்சியில், ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம்.
அதிமுக பற்றியோ, பாஜக பற்றியோ பேச திமுகவுக்கு தகுதி இல்லை. பாஜக தான் தமிழக அரசை இயக்குகிறது எனக் கூறுகிறார்கள். அதில் எந்தவித உண்மையும் இல்லை. அதிமுக என்றும் மக்களுக்கான கட்சி. மக்களுக்கு எந்தக் கட்சி நன்மை செய்கிறதோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
(போட்டோ:AIADMKOfficial/Twitter)