சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. பேசின் பாலத்தை தொட்டு அபாயகரமான அளவுக்கு தண்ணீர் உள்ளதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது சென்னைக்கு ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் தங்க ஏதுவாக உடனடியாக திறந்துவைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும்; கணினி உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
தற்போது எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் இன்று மாலை சென்னையின் தென் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளார். மேலும், வெளியூரில் இருந்து சென்னை திரும்புவர்கள் இரண்டு நாட்கள் கழித்து பயணத்தை திட்டமிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ALSO READ சென்னையில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR