என்எல்சி நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விளை நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனைக் கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் கலந்து கொண்டு முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போது பேசிய அவர், என்என்சி நிர்வாகத்தின் பணிகளை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது. உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரியளவில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
மேலும் படிக்க | அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு
பின்னர் என்எல்சி நிர்வாகத்தின் நுழைவு வாயிலை நோக்கி சென்ற அன்புமணி ராமதாஸை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தனர். அப்போது பாமக தொண்டர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. திடீரென கற்களைக் கொண்டு வீசியும், தடி கம்புகளைக் கொண்டும் சிலர் காவல்துறையினர் தாக்கத் தொடங்கினர். இதில் காவல்துறை வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதுடன், காவல்துறையினர் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் அப்பகுதியே பெரும் போர்களம்போல் காட்சியளித்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை 28 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேநேரத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாலையில் விடுவிக்கப்பட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ