Home Guards: ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தக் கோரி பாஜக பொதுநல மனு

ஊர்காவல் படையினருக்கு ஊதிய அதிகரிப்பு செய்ய வேண்டுமென தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2021, 06:02 PM IST
  • தமிழக காவல்துறையின் துணை அமைப்பாகப் பணியாற்றுகிறது ஊர்க்காவல்ப் படை
  • ஊர்காவல் படையினரின் ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும்
  • பாஜக சார்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பொதுநலன் மனு
Home Guards: ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தக் கோரி பாஜக பொதுநல மனு title=

சென்னை: ஊடக வெளிச்சமில்லாது உண்மையாகப் பாடுபடும் ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை உயர்த்தவேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனது அறிவுறுத்தல்களை தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் மாநில அரசு, ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு மாண்புமிகு நீதியரசர் சஞ்சீவ் பேனர்ஜி, நீதியரசர் ஆதிகேசவலு அடங்கிய உயர்நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது இந்த மனுவை பரிவுடன் ஏற்ற நீதிபதிகள், ஊர் காவல் படையின் சட்டப்பிரிவு 1963 ன்படி வெளியிடப்பட்ட அரசு ஆணை 115 (தேதி 19 12 2019) – ன்படி ஊர்க்காவல் படையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு மட்டுமே பணியில் அமர்த்துவது என்பது குறைவு என்று கருத்து தெரிவித்தனர்.

 காவல் படையில் பணியாற்ற ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் குறைந்தபட்சம் பத்து நாள் ஊதியம் 5600 ரூபாய் வழங்கப்படும் என்ற அரசு ஆணையில் குறுக்கீடு செய்யாமல், ஊர்க்காவல் படைப் பணியை மட்டுமே, தான் செய்யும் முழுநேரத் தொழிலாக கொண்ட காவலருக்கு, வெறும் பத்து நாள் சம்பளம் போதாது என்ற உண்மை நிலையை உணர்ந்து மாநில அரசு அவர்களுக்கான ஊதியத்தையும் பணி காலத்தையும் உயர்த்தித் தரும் என்று நம்புவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

மேலும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்படும் ஒரு நாள் ஊதியம் மற்ற காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தில் ஒருநாள் ஊதியமாக உதவிக்கு சமமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Also Read | பயங்கர லாரி விபத்தில் பரிதாபமாய் உயிர் இழந்த பள்ளி ஆசிரியர்

வெறும் பத்து நாள் வருமானம் அவர்கள் குடும்பத்திற்கு போதாது. மேலும் ஊர்காவல் படையில் பணியாற்றுபவர்களில் ஒரு சிலருக்கு மாதம் முழுதும் வேலை கொடுக்கும் ஒரு சிலருக்கு வெறும் பத்து நாள் மட்டும் வேலை கொடுப்பது எதன் அடிப்படையில் என்பதை அரசுத் தரப்பு விளக்கவில்லை.

நீதியரசர்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தன்னலம் பாராமல் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய ஊர்காவல் படையினருக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியிருக்கிறது அவர்கள் பணிக்கு ஏற்ற ஊதியமும், பணிக்கால அதிகரிப்பும், குடும்பம் நடத்த தேவையான பொருள் ஈட்ட உதவும்.

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை மதித்து ஊர்காவல் படையினருக்கு ஊதிய அதிகரிப்புக்கான உத்தரவை மாநில அரசு வெளியிட வேண்டுமென்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.  

Also Read | மக்களே முந்துங்கள்! Co-optex இல் தீபாவளி சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடி

தமிழக காவல்துறையின் ஒரு துணை அமைப்பாகப் பணியாற்றும் ஊர்க்காவல்ப் படை, காவல் துறையினருக்கு உறுதுணையாக 1946ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறது. புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நோய்தொற்று, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் ஊர் காவல் படையின் பங்கு மிகவும் முக்கியமானது.

தன்னார்வ தொண்டாக அவர்கள் காவல் பணியின் அனைத்து பணிகளையும் செய்ய முன்வந்து இருக்கும் ஊர்காவல் படையினருக்கு காவலர்களுக்கான பயிற்சிக்கு இணையாக முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. 

காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் அனைத்து பணிகளையும் அதாவது வாகனம் ஓட்டுவது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது, இரவு ரோந்துப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது, தேர்தல் கால பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராவது போன்ற காவல்துறையினர் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படையினர் செய்துவருகின்றனர். 

Read Also | தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தேவை-பாமக

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News