சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

Bus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2024, 10:10 PM IST
  • ஏற்காட்டில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து
  • சேலம் நோக்கி வரும்போது தலைக்குப்புற கவிழ்ந்தது
  • திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது
சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி title=

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்காட்டிற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தனியார் வாகனங்களிலும், அரசு பேருந்துகளிலும் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்து ஏற்காட்டின் அழகை ரசித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து இளைப்பாற இன்றும் ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்றனர். ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிய சுற்றுலா பயணிகள் தனியார் பேருந்து ஒன்றின் மூலம் இன்று மாலை சேலம் நோக்கி புறப்பட்டனர். அந்த தனியார் பேருந்து 13-வது கொண்டு ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

மேலும் படிக்க | Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!

அதாவது திடீரென பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. ஓட்டுநர் கடுமையான முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால், 13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து பக்கவட்டு தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். 

சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோர் நேரில் சென்று அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது. இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News