அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்றம் கேள்வி

அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான ஆரம்பகட்ட பணியை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அதை அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.     

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 17, 2022, 07:25 PM IST
  • அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு
  • தமிழக அரசிடம் நீதிபதி சரமாரி கேள்வி
  • விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்றம் கேள்வி  title=

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் நீதிபதியிடம் இது குறித்த அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், மரங்களை வெட்டுவதற்கான விருப்பங்கள் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் , யாரும் விருப்பம் தெரிவிக்காததால் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிற மாநில அதிகாரிகளையும் அழைத்து அயல்நாட்டு மரங்களை அகற்றுவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அயல்நாட்டு மரங்களை அகற்றும் வழக்கில் நான்காண்டுகளாக முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்படுவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும், 700 ஹெக்டேர்களில் அயல்நாட்டு மரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்ற குழு காண்டறிந்துள்ள நிலையில், அந்த குழுவின் ஆலோசனைகளை கேட்காதது ஏன் எனவும் நீதிபதி கெள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, இதுபோன்ற அறிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றும், ஆக்கப்பூர்வமான பணியை எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதி, அயல் நாட்டு மரங்களை அகற்றும் ஆரம்ப கட்ட திட்டத்தை தொடங்கவே 8 ஆண்டுகள் என்றால், அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இது குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது .

மேலும் படிக்க | நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும்: தமிழக அரசு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News