முழு அடைப்பின் போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றி மற்றவர்களை விழிப்புடன் வைத்திருக்கவும், மகிழ்விக்கவும் மக்கள் சில சிறந்த யோசனைகளைக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கலைஞர் தனது ஆட்டோரிக்ஷாவை கொரோனா வைரஸ் போல வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த ஆட்டோ ரிக்ஷாவின் இந்த புகைப்படங்கள் தற்போது ட்வட்டரில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனர்கள் தங்கள் கருத்துக்களில் 'ஆட்டோ-இம்யூன்', 'நல்ல படைப்பு', மற்றும் 'புதுமையானது' என்று பாராட்ட துவங்கியுள்ளனர். இதனிடையே சிலர்., ‘நடந்துகொண்டிருக்கும் பூட்டுதலுக்கு மத்தியில் அவர் தனது ஆட்டோவை எங்கு எடுத்துச் செல்வார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து இதுபோன்ற விசித்திரமான முயற்சிகள் வெளியாவது இது முதல் முறை அல்ல,. முன்னதாக தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை அதிகாரி ஒருவர் முன்னதாக கொரோனா ஹெல்மட்டை அறிமுகம் செய்தார்.
Tamil Nadu: An artist modifies an autorickshaw on the theme of #coronavirus to spread awareness about the disease in Chennai. pic.twitter.com/Zj3XITAFCm
— ANI (@ANI) April 23, 2020
சென்னை வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ராஜேஷ் பாபு என்ற அதிகாரி, கொரோனா வைரஸ் போல தோற்றமளிக்கும் ஹெல்மெட் அணிந்ததற்காக சமூக ஊடகங்களில் வைரலாகினார். இறுதியில் அவரை 'கொரோனா-மனிதன்' என்று நெட்டிசன்கள் அழைத்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை ஒரு 'கொரோனா ஹெல்மெட்' உடன் 'கொரோனா குச்சி' மற்றும் கேடயத்தை அறிமுகம் செய்தது. சமூக தொலைதூரத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த காவல்துறை இந்த சாதனங்களை பயன்படுத்தியது.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாடு, வைரஸ் பரவாமல் தடுக்க முழு அடைப்பு நிலையில் உள்ளது. எனவே, ராஜேஷ் மக்களை அணுகுவதற்கும் நிலைமை மற்றும் வைரஸ் எவ்வளவு கடுமையானது என்பதை அவர்களுக்குச் சொல்வதற்கும் ஒரு தனித்துவமான அணுகுமுறையை நாடினார். தொடரந்து கௌதம் என்ற உள்ளூர் கலைஞருடன் அவர் ஜோடி சேர்ந்தார், இதன் முயற்சியாக காகிதத்தைப் பயன்படுத்தி அதிகாரியின் தலைக்கவசத்தைத் தனிப்பயனாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஆட்டோ குறித்து பேசுகையில், சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் அதன் மேல் கூர்முனை பொறுத்தப்பட்டுள்ளது. மற்றும் வைரஸ் போல் காட்சியளிக்க சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.