இனி சென்னை சென்ட்ரல் சென்றால் கவனமா இருங்க - இந்தியாவிலேயே முதல்முறை!

India's First Silent Railway Station: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஒலி ரீதியிலான பொது அறிவிப்புகள் இன்றி முழுமையாக அமைதியாக மாற்றப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 27, 2023, 06:38 PM IST
  • இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
  • புதிய முறைக்கு வரவேற்பும், விமர்சனமும் சேர்ந்தே வருகிறது.
  • புறநகர் ரயில் நிலையத்தில் பழைய முறை பின்பற்றப்படுகிறது.
இனி சென்னை சென்ட்ரல் சென்றால் கவனமா இருங்க - இந்தியாவிலேயே முதல்முறை! title=

India's First Silent Railway Station: 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம்தான், சென்னை சென்ட்ரல். தற்போது, டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படும் அந்த நிலையம் நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது. 

ஆம், பல தசாப்தங்களாக ரயில் பயணிகளை வழிநடத்தும் பொது அறிவிப்பு முறைக்கு விடைகொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒலி மூலம் அறிவிக்கப்படும் பொது அறிவிப்பு முறைக்கு மாற்றாக முழுவதும் எழுத்து அறிவிப்புகள்தான் விடுக்கப்படும். விமான நிலையங்களில் செயல்படுவது போன்று, இந்த சென்ட்ரல் நிலையமும் செயல்பட உள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்,"அனைத்து காட்சி அறிவிப்பு பலகைகளும் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும், பயணிகளின் சுமூகமான அனுபவத்திற்காகவும் விசாரணைச் சாவடிகளில் போதுமான பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈவிஆர் பெரியார் சாலை (எம்டிசி பேருந்து நிறுத்தம்), புறநகர் முனையம், வால் டாக்ஸ் சாலை (கேட் எண் 5) ஆகிய மூன்று நுழைவுப் புள்ளிகளிலும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளைக் காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் நிறுவப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் சாலைகள், பாதைகள் சந்திக்கும் இடத்திலும் 40-60 இன்ச் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன" என்றார். 

மேலும் படிக்க | மதுரை எய்ம்ஸ்: அறிவித்தது அத்தனை கோடி... ஆனால் கொடுத்தது இவ்வளவுதானா? - முழு விவரம்

புறநகர் ரயில் நிலையத்தில் பொது அறிவிப்பு நடைமுறை தொடரும். இந்த நடவடிக்கை "பரிசோதனை அடிப்படையில்" மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட சென்னை ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், விளம்பரங்களில் இருந்து ஆடியோவும் இருக்காது என்று கூறினார். "ரயில்வே ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் பயணிகள் தகவல் மையங்கள் பயணிகளுக்கு வழிகாட்டும்," என்று அவர் கூறினார்.

பயணிகளின் பதில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 200 எக்ஸ்பிரஸ் ரயில்களை தினசரி கையாளுகிறது. மேலும் தினசரி சராசரியாக 5.3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதுவரை தமிழ் அறிவிப்புகளுக்குப் பின்னால் குரல் கொடுத்து வந்தவர், ஈரோட்டைச் சேர்ந்த டப்பிங் கலைஞரும் கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசன். 

ரயில் வருகை, புறப்பாடு, தாமதம் மற்றும் ரயில்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு பொது அறிவிப்பு முறை பயன்படுத்தப்பட்டது. இந்த பொது அறிவிப்பு முறை விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளில் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. பார்வை குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறன் பயணிகளுக்கும் இது பயனுள்ளது என நிரூபிக்கப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, ரயில் நிலையத்தில் இப்போது அதன் பிரதான நுழைவாயிலில் பிரெய்லி வழிசெலுத்தல் வரைபடங்களை நிறுவியுள்ளது. நிலையத்தின் கண்ணோட்டத்தை வழங்கும் சைகை மொழி வீடியோவை அணுகுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு QR குறியீடுகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

பயணிகளின் அனுபவத்தின் அடிப்படையில் கூடுதல் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர் "நிலைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, நுழைவாயிலில் பெரிய காட்சி பலகைகள் வைக்கப்படும். விசாரணை கவுன்டர்களும் அதிகரிக்கப்படும்” என்றார்.

ஒரு சிலர் பயணிகள், பொது அறிவிப்பு முறைக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும், இந்த மௌனமான முறையும் நன்றாகவே உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சிலர் இந்த கருத்தை ஏற்க மறுக்கின்றனர். இது சாதரண பயணிகளை ரயில் நிலையத்தை பயன்படுத்த அச்சப்பட வைக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், ரயில் பயணிகளை விமான பயணிகளுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | NEET PG: நீட் முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்குமா? நடக்காதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News