நாளை முதல் இரவு 9 மணி வரை இயங்கும் Metro ரயில்கள்: Chennai Metro

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்கள் இனிமேல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு நாளை முதல் நகரத்தில் செயல்படுத்தப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2020, 04:03 PM IST
  • சென்னை மெட்ரோ சேவை செப்டம்பர் 7 ஆம் தேதி நகரில் மீண்டும் தனது செயல்பாட்டைத் தொடங்கியது.
  • பொதுமக்களின் வேண்டுகோளின்படி செயல்பாட்டு நேரத்தை சென்னை மெட்ரோ, கூடுதlலாக ஒரு மணி நேரத்திற்கு நீட்டித்துள்ளது.
  • முதல் நாளில், மெட்ரோவில் குறைந்தபட்ச பயணிகளையே காண முடிந்தது.
நாளை முதல் இரவு 9 மணி வரை இயங்கும் Metro ரயில்கள்: Chennai Metro title=

சென்னை: மத்திய அரசின் COVID-19 லாக்டௌன்-4 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ சேவை செப்டம்பர் 7 ஆம் தேதி நகரில் தனது செயல்பாட்டைத் தொடங்கியது.

மெட்ரோ ரயில்கள் (Metro Trains) வாஷர்மன்பேட்டிலிருந்து விமான நிலையத்திற்கு நீல வரிசையிலும் (Blue Line) செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ இடையே பச்சை வரிசையிலும் (Green Line) இயக்கப்பட்டன.

ALSO READ: மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!!

அதன் செயல்பாட்டின் முதல் நாளில், மெட்ரோவில் குறைந்தபட்ச பயணிகளையே காண முடிந்தது. அலுவலகங்களுக்குச் செல்லும் ஒரு சில பணியாளர்களைத் தவிர, கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. மெட்ரோவைத் தேர்ந்தெடுத்த குறைந்தபட்ச பயணிகள், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதைக் காண முடிந்தது.

சமீபத்திய புதுப்பித்தலின் படி, சென்னை மெட்ரோ (Chenai Metro) பொதுமக்களின் வேண்டுகோளின்படி செயல்பாட்டு நேரத்தை கூடுதlலாக ஒரு மணி நேரத்திற்கு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்கள் இனிமேல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு நாளை முதல் நகரத்தில் செயல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவுவதைத் தடுக்க மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் மேலும் அறிவித்தனர்.

ALSO READ: தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள COVID-19 சோதனை கட்டாயம்: தமிழக அரசு!!

Trending News