எண்ணெய் கழிவு: மீனவர்களின் வாழ்வதாரம் பாதிப்பு - தொல். திருமாவளவன்

Last Updated : Feb 4, 2017, 01:47 PM IST
எண்ணெய் கழிவு: மீனவர்களின் வாழ்வதாரம் பாதிப்பு - தொல். திருமாவளவன் title=

எண்ணூர் எண்ணெய் கழிவு பாதிப்பை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டு 8 நாட்கள் ஆகிவிட்டன. கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி வரும் எண்ணெய் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகின்றனர். கடலுக்குள் உள்ள கழிவுகளை எப்படி அகற்றப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி விற்பனையாகும் மீன்களின் அளவை காட்டிலும், தற்போது மிக குறைந்த அளவே மீன்கள் விற்பனையாகின்றன என மீனவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. இது சரியாகும் வரை மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். 

கடல் ஓரத்தில் ஒதுங்கிய கழிவுகள் டன் கணக்கில் அள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதை வாளியில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுகள் அள்ளப்படுகின்றன. தன்னார்வலர்கள் இந்த கழிவுகளை வாளிகளில் அள்ளி வருகின்றனர். இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை. உடனடியாக நவீன உபகரணங்களை பயன்படுத்தி இந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Trending News