Karunanidhi Centenary Meeting: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை மெரினாவில் இன்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் துக்கி போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன், அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் கவிழிந்து விட மாட்டீர்கள்' என்ற கலைஞரின் வசனத்தை தொடங்கி முதல்வர் தனது உரையை தொடங்கினர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின்,"கலைஞர் நூற்றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதி கொண்டாட ஏற்பாடு செய்தோம். ஆனால் ஓடிசா விபத்து காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது, இப்படி செய்ததைதான் அவரும் (கருணாநிதியும்) விரும்பி இருப்பார்.
இந்த நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வரை கொண்டாடப்படும். இன்னும் 5 ஆண்டுகள் அவர் வாழந்து இருந்தால் நடு நாயகனாக இதே மேடைய அவர் அமர்ந்து இருப்பார். அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்று சொல்வதை விட, அவர் நம்மை என்றும் கண்காணித்து கொண்டிருப்பார் என்றே நான் எண்ணிக்கொள்வேன்.
#Live: கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரைhttps://t.co/0n7yEuDUjT
— M.K.Stalin (@mkstalin) June 7, 2023
மேலும் படிக்க | தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-ம் தேதி சேலம் பயணம்\
இந்த கொண்டாட்டத்தின் மூலம் கலைஞருக்கு புதிய புகழை சேர்க்கப் போகிறோம் என்றல்ல, நன்றியின் அடையாளமாக இந்த விழா நடந்து வருகிறது. நாம் சீமான் வீட்டுப் பிள்ளைகள் அல்ல, சாமானியன் வீட்டுப் பிள்ளை என்று சொன்னவர் கலைஞர். அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சி தான், திமுகவின் ஆட்சி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் ஆட்சியாக தான் இருக்கும். நான் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக இந்த கூட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறார் செயல் பாபு என்று சொல்லக்கூடிய அமைச்சர் சேகர் பாபு, இதை செய்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களை செல்லிக்கொள்கிறேன்.
மேடையில் இருக்க கூடிய தோழமைகள் முன்னுதாரணமாக இருந்தவர் கருணாநிதி. உலகத்தலைவராக செயல்பட்டவர் கருணாநிதி. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலை செய்து காட்டுவேன் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான். என்னுள் இந்த தன்னம்பிக்கையை என்னுள் ஊட்டியவர் அவர், நான் அவரின் கொள்கை வாரிசு நான்" என்றார். முன்னதாக இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | ஆவினில் குழந்தை தொழிலாளர்களா? சர்ச்சைகளும் விளக்கமும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ