கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் குருஜி. இவரது பெயரை கேட்டாலே கோவை மக்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது பறவைகள்தான். சிட்டுக்குருவி போன்று அழிந்துவரும் பறவை இனங்களை மீட்டெடுக்க ஈஸ்வரன் குருஜி எடுக்காத முயற்சிகளே இல்லை. பறவைகளின் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகள் என இளம் தலைமுறையினரிடம் தொடங்கி பெரியவர்கள் வரை பறவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.
கடந்த மாதம் 21 ஆம் தேதி சிட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் (SAVE BIRDS YOUR SELF)எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தார். அதன்படி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை குழுவாக இரு சக்கர வாகனத்தில் பயணத்தையும் தொடங்கினார்.. வழிநெடுக பல்வேறு மாநில மக்களிடம் பறவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியவர்கள் வெற்றிகரமாக பயணத்தை முடித்து கோவை திரும்பினார்கள்.
மேலும் படிக்க | ஏசி-யை வாடகைக்கு எடுக்க முடியுமா?
பயணத்தின் நோக்கத்தை செல்லும் இடங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் இளம் தலைமுறையினரிடம் எடுத்து கூறியதாகவும் பறவைகளின் தன்மையை மனித குலம் அறிந்து கொள்வதற்காக இந்த பேரணியை நடத்தியாகவும் ஈஸ்வரன் குருஜி குறிப்பிட்டார். மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய தீர்வு என உறுதிபட தெரிவிக்கும் ஈஸ்வரன் குருஜியின் முயற்சிக்கு ஏற்கனே ஒருகூட்டம் உறுதுணையாக உள்ளது. தற்போது அவருடன் பலரும் கைகொடுக்கத் தொடங்கிவிட்டனர். இவர் போன்ற நபர்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வால் பறவைகள் மீது மனிதர்களின் காதல் அதிகரிக்குமா என்று பார்ப்போம்... ஒரு நிமிடத்திற்கு மேல் எதாவது ஒரு பறவையை உற்று பாருங்கள்.. நீங்களும் உணர்வீர்கள்.... பறவைகளின் மீதான காதலை....
மேலும் படிக்க | எமனை ஏமாற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்! எத்தனை வயது தெரியுமா?