தாமிரபரணி ஆற்றில் இருந்து பெச்சி உள்ளிட்ட தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது. அதற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தினார்கள்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில், பெப்சி, கோக் ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வரும் மே 1 முதல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோக், மதுரா கோட்ஸின் 2 ஆலைகள், 3 காகித ஆலைகள், சிமெண்ட் ஆலை உட்பட 8 ஆலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.