சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று (COVID-19) அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கல்லூரிகளை மூடுவதா? இல்லையா? என்பது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், இனி வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் (Online Classes) மட்டும் நடைபெறும் என்றும், அதேபோல செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளும் மூடப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9, 10 ,11 ஆகிய வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Online Class) தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்ட. பொதுத்தேர்வு எழுதவுள்ள 12 ஆம் வகுப்பு (12th Class) மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொடர்ந்து வகுப்பை நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR