தமிழகத்தின் இன்றைய COVID-19 நிலவரம்: 5,528 பேருக்கு பாதிப்பு; 64 பேர் மரணம்..

இன்று 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,29,416 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 10, 2020, 06:31 PM IST
தமிழகத்தின் இன்றைய COVID-19 நிலவரம்: 5,528 பேருக்கு பாதிப்பு; 64 பேர் மரணம்..
Photo: PTI

சென்னை: தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 991 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் இன்று 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,29,416 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 48,482 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று 85,473 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 56,30,323 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்: 10-09-2020
கொரோனா பாதிப்பு - 5,528 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 48,482 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 85,473
குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,185 
இறப்பு - 64

ALSO READ |  பணம் மூலம் பரவுகிறதா கொரோனா?... தெளிவுபடுத்துமாறு CAIT கோரிக்கை!!

No description available.

 

No description available.

 

No description available.

No description available.