சென்னை: தேமுதிக-வின் மேலாளரும் நடிகருமான விஜயகாந்தின் (Vijayakanth) உடல்நிலை இயல்பு நிலைக்கு வந்துள்ளது என்று மியோட் மருத்துவமனை (MIOT Hospital) தெரிவித்துள்ளது.
ஒரு செய்திக்குறிப்பு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அவரது மனைவி மற்றும் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் (Premalatha Vijayakanth) திங்களன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
22.9.2020 அன்று விஜயகாந்தின் COVID-19 சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததாக MIOT இன்டர்நேஷனல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விஜயகாந்தின் நண்பர்களும் சகாக்களும், அவர் விரைவாக குணமடைய வேண்டும் என சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: DMDK தலைவர் விஜயகாந்திற்கு COVID-19; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
விஜயகாந்தின் ரசிகர்கள் ஏற்கனவே ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் #PrayForVijayakanth என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நல குறைவு ஏற்பட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது அவருக்கு வயது 68 ஆகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக விஜயகாந்தின் தே.மு.தி.க (DMDK) கட்சியும் உள்ளது.
தொடர்ந்து பல அரசியல் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதைப் பார்த்து வருகிறோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் என கட்சி பாகுபாடின்றி கொரோனா அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
ALSO READ: ‘விரைவில் குணமடைந்து வா நண்பா’ – விஜயகாந்துக்கு ராதாரவி செய்தி!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR