திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Last Updated : Feb 21, 2020, 06:52 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி title=

திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நெஞ்சுவலி காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் மற்றும் நவம்பரிலும்கூட  திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News