திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 01:15 PM IST
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார்.
  • சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
  • கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் அவருக்கு செலுத்தப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் title=

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள 

காவேரி மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 

தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான மு.கா ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி கொரோனா வைரசுக்கு (Coronavirus) எதிரான தடுப்பூசியின் முதல் டோசை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இரண்டவது டோசை செலுத்திக்கொள்ள இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்த மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார்.

தான் கோவிட் தடுப்பூசியின் (Vaccine) இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக, மு.க. ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், " இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!'' என்று பதிவிட்டுள்ளார். 

ALSO READ: கொரோனா வைரஸ்: இந்தியாவில் 315,802 பேருக்கு தொற்று உறுதி; 2,102 பேர் பலி!

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இன்றைய (வியாழக்கிழமை) அறிக்கையின் படி, நாட்டில் 315,802 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவிவரும் மோசமான சுகாதார செயல்பாடுகளுக்கு இடையே, இந்தியாவில் ஒரே நாளில் 2,102 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 184,672 ஆக உள்ளது. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

கொரோனா பாதிப்புகளின் உயர்வு இரண்டாவது அலைகளில் அதிவேகமானது. மகாராஷ்டிரா (Maharashtra) அரசு புதன்கிழமை இரவு, மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் ஸ்பைக்கை எதிர்த்துப் போராடுவதற்கு "பிரேக் தி செயின்" (Break the Chain) என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்த விதிகள் இன்றிரவு முதல் மே 1 காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

ALSO READ: கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News