விஜய் அரசியலுக்கு வருவதால் தான் லியோவிற்கு பிரச்சனை - கே.பி.முனுசாமி!

அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை, குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2023, 09:34 AM IST
  • எந்த படம் வெளி வந்தாலும் ரெட் ஜெயின்ட் வெளியிடனும்.
  • லியோ படத்திலும் அவர்கள் தலையீடு உள்ளது.
  • அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.
விஜய் அரசியலுக்கு வருவதால் தான் லியோவிற்கு பிரச்சனை - கே.பி.முனுசாமி! title=

மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, எந்த படம் வெளி வந்தாலும் அந்த படத்தை தான் தான் வெளியிட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையில் மிரட்டி, அதில் வருவாயை சம்பாதிக்கின்றது. படத்தை வெற்றி பெற செய்தலும், தோல்வி அடைய செய்தலும் நிலை தான் உள்ளது, அதேபோல தான் இந்த லியோ படத்திலும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி அடைந்த காரணத்தினால் தான் இவ்வாறு நடக்கிறார்கள்.  அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை, குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை. தமிழக சபாநாயகர் திமுகவின் முதலமைச்சர் என்ன கண் அசைவு செய்கிறாரோ அது போல் நடக்க கூடிய ஒரு சட்டப் பேரவை தலைவராக தான் சபாநாயகர் இருக்கிறார் என காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற அதிமுகவின் 52வது ஆண்டு விழா  பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றியப் பின், செய்தியாளர்களுக்கு  அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க | லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக,காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுகவின் 52வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த மேல் ஓட்டிவாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்  தும்பவனம் டி.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ பங்கேற்க வருகைப் புரிந்த அவருக்கு அதிமுக சார்பில் கட்டைக் கூத்து கலைஞர்கள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் பொன் விழா ஆண்டினை முன்னிட்டு மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் அதிமுகவின்  கொடியினையேற்றி, கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன் பின் பொதுக் கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ சிறப்புரையாற்றி பேசிய பின் ஏழை எளியோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே..பி.முனுசாமியிடம், தமிழகத்தில் சினிமாவை காப்பாற்றுவது திமுக தான் என தமிழக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக சினிமாவை காப்பாற்றுவது திமுக அல்ல, சினிமாவை அழிப்பது தான் திமுக, சினிமாவில் முதலீடு செய்து உழைத்த தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தடையாக இருப்பது தாம் திமுக அரசு என பதிலளித்தார். 

மேலும் தற்போது நடிகர் விஜய்யின் லியோ படம் சிறப்பு காட்சிக்கான அனுமதி பெறுவதில் விஜய் அரசியலுக்கு வரும் காரணத்தால் தான் இது ஓர் அரசியல் நோக்கத்தோடு திமுக கையாள்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, எந்த படம் வெளி வந்தாலும் அந்த படத்தை தான் தான் வெளியிட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையில் மிரட்டி, அதில் வருவாயை சம்பாதிக்கின்றது, படத்தை வெற்றி பெற செய்தலும், தோல்வி அடைய செய்தலும் நிலை தான் உள்ளது, அதேபோல தான் இந்த லியோ படத்திலும் அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி அடைந்த காரணத்தினால் தான் இவ்வாறு நடக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் அதேபோல் மகளிர் உரிமைத் தொகைக்கான பயனாளிகள் பட்டியல்  விவரங்களை மாவட்ட வாரியாக தமிழக அரசு வெளியிடவில்லை,அது குறித்து தமிழக சட்ட சபையில் அதிமுக சார்பில் கேள்வி எழுப்ப  படுமா என்ற கேள்விக்கு, அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை,குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை,தமிழக சபாநாயகர் திமுகவின் முதலமைச்சர் என்ன கண் அசைவு செய்கிறாரோ அது போல் நடக்க கூடிய ஒரு சட்டப் பேரவை தலைவராக தான் சபாநாயகர் இருக்கிறார் என தெரிவித்தார். மேலும் விமர்சனங்களை தாங்கி கொள்கின்ற சக்தி இந்த திமுக ஆட்சியாளர்களிடையே இல்லை,ஆகையால் தான் தமிலக சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் வெளிப்படை தன்மையை திமுகவால் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.  இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும்,மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம்,அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு,மாநில எம்ஜிஅர் இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா,மாவட்ட அவைத் தலைவர் குண்ண்வாக்கம் கிருஷ்ணமூர்த்தி,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ! அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News