சென்னை: கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பை அடுத்து கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக மனு அளித்தது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டபேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் மனுவை அளித்தார்.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவரச வழக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை (மே 6) விசாரிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Supreme Court agrees to hear on Monday a plea by DMK against the decision of Tamil Nadu Assembly Speaker's notice for disqualification of three AIADMK MLAs for supporting TTV Dhinakaran. pic.twitter.com/SANqqIZ5RP
— ANI (@ANI) May 3, 2019