தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் - மக்கள் உற்ச்சாக வரவேற்ப்பு

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 20, 2019, 09:05 AM IST
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் - மக்கள் உற்ச்சாக வரவேற்ப்பு title=

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. 

தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. மேலும் அதிமுக - திமுக கட்சிகள் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. 

இந்தநிலையில், இன்று திமுக தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை இன்று காலை தொடங்கினார். 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முக்கிய சாலைகளில் நடந்துச்சென்றே மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்து வருகின்றனர்.

திருவாரூர் தொகுதி மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News