சென்னை: கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை அளிக்கிறது. ஸ்விக்கி நிறுவன ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினை குறித்து, இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தமிழக முதலமைச்சர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கோரிக்கை வைத்துள்ளார்.
ALSO READ | ஸ்விக்கி உணவு வினியோக ஊழியர்களின் ஊதியக்குறைப்பு சிக்கலை தீர்க்க வேண்டும்
அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று ஸ்விக்கி ஊழியர்கள் (Swiggy Employees) சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர்.
பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை!
தமிழக முதலமைச்சர் (CM Edappadi K Palaniswami) இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்!
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று @swiggy_in ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர்.
பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை! @CMOTamilNadu இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்! pic.twitter.com/njSOCF42ZO
— M.K.Stalin (@mkstalin) August 20, 2020