வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம்... திமுக வழக்குப் போட்டது ஏன்? - முழுமையான விளக்கம்!

DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 3, 2024, 01:47 PM IST
  • விவி பேட் பயன்படுத்தும் நடைமுறையை மாற்றுகின்றனர் - ஆர்.எஸ். பாரதி
  • வாக்குகள் பேலட் யூனிட்டில் இருந்து நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு செல்ல வேண்டும் - என்.ஆர். இளங்கோ
  • ஆனால், அவை விவி பேட் மூலமாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு செல்கிறது - என்.ஆர். இளங்கோ
வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம்... திமுக வழக்குப் போட்டது ஏன்? - முழுமையான விளக்கம்! title=

DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வழக்கு தொடுத்துள்ளது. இதுகுறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "வாக்குப்பதிவு இயந்திரங்களில் 22 லட்சம் வாக்காளர்களில் 2% மாற வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் வரையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. கடந்த 2019இல் விசிக தலைவர் திருமாவளவன் கூட மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

'புதிய நடைமுறையை மாற்ற வேண்டும்'

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தி உள்ளோம். ஆனாலும் அது குறித்து தேர்தல் ஆணையம் உரிய பதில் தரவில்லை. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

மேலும் படிக்க | நாளையிலிருந்து ட்ரக் உதயநிதி என்று அழைப்போம்: பாஜக தலைவர் அண்ணாமலை

வாக்கு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையை இந்த முறையும் பின்பற்ற வேண்டும். விவி பேட் பயன்படுத்தும் நடைமுறையை மாற்றுகின்றனர். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும்.

விவி பேட் ஒப்புகைச்சீட்டு

விவி பேட் ஒப்புகைச்சீட்டை நூற்றுக்கு நூறு சதவீதம் எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். முறையாக தேர்தல் நடைபெற வேண்டும். நியாயமாக வாக்குகள் எண்ணப்பட வேண்டும். வாக்கு இயந்திரங்கள் தயாரிப்பவர்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற புகார்கள் இருக்கிறது. 

இதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காக நீதிமன்றத்தை நாடி உள்ளோம். நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். வாக்காளர்கள் மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை உள்ளது. ஆனால் கள்ளத்தனமாக யாரும் வந்து விடக்கூடாது.

சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்...

இனி வருங்காலங்களிலும் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுகவின் இந்த வழக்கு வழிகாட்டியாக இருக்கும் என்ற நிலை ஏற்படும். அதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளும்.

எங்கள் வெற்றி என்பது வாக்காளர் மீதான நம்பிக்கை. வாக்கு இயந்திரம் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பாஜகவினர் 400க்கு மேல் வெற்றி பெறுவோம் என அடித்து கூறுவதால் அதன் மீது சந்தேகம் உள்ளது. அதனை தேர்தல் ஆணையம் நிவர்த்தி செய்ய வேண்டும்", என்றார். 

என்ன பிரச்னை?

இடையே பேசிய என்.ஆர்.இளங்கோ, "வாக்குகள் பேலட் யூனிட்டில் இருந்து நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு செல்லாமல் விவி பேட் மெஷின் வழியாக கண்ட்ரோல் யூனிட்டுருக்கு செல்கிறது. அது இயற்கையாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தலை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் நடத்துவதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ, அதை வழக்குகள் மூலமாக செய்வது அரசியல் கட்சியினுடைய கடமை. அதை திமுக செய்து வருகிறது" என்றார்.

மேலும் படிக்க | பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News