கொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா...!!!

சத்குருவின் ஈஷா அறக்கட்டளை எப்போதுமே சமூக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க இயலாது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 27, 2020, 06:27 PM IST
  • சத்குருவின் ஈஷா அறக்கட்டளை எப்போதுமே சமூக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க இயலாது.
  • அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டது.
  • இவ்வகுப்புகள் தங்களுக்கு பெரிதும் பயன் தரும் வகையில் இருந்ததாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா...!!! title=

சத்குருவின் ஈஷா அறக்கட்டளை எப்போதுமே சமூக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க இயலாது.

காவிரி நதியை காக்க “காவேரி கூக்குரலல்” என்னும் இயக்கத்தின் மூலம் காவிரி நதியை காக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக்கொடுத்தனர்.

இந்த யோகா வகுப்புகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மத்திய சிறைச்சாலைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டது. 

ALSO READ | ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்தார்..!!!

இதில் 8,165 ஆண் கைதிகள், 3,453 பெண் கைதிகள், 3,018 ஆண் ஊழியர்கள், 953 பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,589 பங்கேற்று பயன்பெற்றனர்.

அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக ’சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக ‘யோக நமஸ்காரம்’ மற்றும் ‘ஈஷா க்ரியா’ ஆகிய பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இவ்வகுப்புகள் தங்களுக்கு பெரிதும் பயன் தரும் வகையில் இருந்ததாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தில் தமிழகம் எங்கும் மரக்கன்றுகள் நடப்பட்டன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News